அரசியல்வாதிகளின் பின்னே நிற்காதீர்கள் - சேட்டன் பகத்
சேட்டன் பகத் -
2016 ஆம் ஆண்டு பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை எனக்கு அதிர்ச்சி தந்தது. காரணம், காங்கிரஸ் அரசின் தவறையே இந்த அரசும் செய்கிறதோ என்று எனக்குத் தோன்றியது. ஓய்வூதிய சேமிப்புகளுக்கு கூட வரி போடுவதை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை.
அரசுகள் வரி போடுவதால் என்ன பயன்? வருவாய் அதிகரிப்போது ஏழைகளை நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்களை மேல்தட்டுக்கும் நகர்த்துவதற்கான முயற்சிகளை செய்யமுடியும். ஆனால், அளவுக்கு அதிகமான வரி என மக்களை நினைக்க வைப்பது இதற்கு எதிர்மறையான விளைவைத் தரும்.
மும்பையில் ஒரு கஃபே செயல்படுகிறது என வைத்துக்கொள்வோம். அங்கு அருகிலுள்ள அரசு அலுவலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் வந்து டீ, காபி, ஸ்நாக்ஸ் என நொறுக்கி எறிகின்றனர். பில்லிலும் வரி உண்டு. அந்த அதிகாரிகளின் சம்பளத்திலும் வரி பிடித்தம் உண்டு. அவர்கள் வாங்கும் ஒவ்வொரு பொருட்களிலும் கல்வி வரி உள்ளிட்டவை அடங்கும். மேலும், பெட்ரோல் டீசலும் முக்கியமான வரிகள் உண்டு.
இப்போது வரி அதிகமாவதால் கூட்டம் குறைகிறது. கஃபே மூடிவிடுகிறார்கள் எனில் என்னாகும்? அங்கு வேலைவாய்ப்புகள் குறைகிறது என்று பொருள். இப்படியிருந்தால் இளைஞர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பை அரசு ஏற்படுத்தி தர முடியும்? இது மேலும் ஏழைகளை அதிகரிக்கிறது. அரசியல் செய்ய ஏழைகள் தேவை. நாட்டின் வளர்ச்சிக்கு அல்ல.
நவீன காலத்திலும் ஏழைகளுக்கான கட்சி என்பது விளையாட்டான வார்த்தையாக எனக்கு படவில்லை. சோசலிச நாடு என்பதிலிருந்து இந்தியா முதலாளித்துவ நாடாக மாறி வருகிறது. மாற்றங்கள் தேவை என்றால் அதை மக்களே இயக்கமாக மாற்றினால்தான் சாத்தியம். அரசியல்வாதிகளின் பின்னால் கொடி பிடித்து நிற்பதால் எந்த பிரயோஜனமும் ஏற்படப்போவதில்லை.
சேட்டன் பகத்தின் இந்தியா பாசிட்டிவ் நூலின் கட்டுரைகளைத் தழுவியது.