பட்ஜெட் 2019 - ஏறுது விலை





Image result for நிர்மலா சீதாராமன்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்


பட்ஜெட்டில் நாம் அறிய வேண்டியது என்ன?

2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இம்முறை வசதி படைத்தவர்களுக்கான வரி அதிகரித்துள்ளது. அதனால் மாத சம்பளதார ர்களுக்கு என்ன பிரயோஜனம்? மனசளவில் ஒரு திருப்திதான். வேறொன்றுமில்லை.


அரசின் வரிவிதிப்பால் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை அதிகரிக்க இருக்கிறது. நீங்கள் ஒரு பைக்கை வைத்திருந்து அதற்கு 5000 ரூபாய் செலவழித்தால், இனி கூடுதலாக ரூ.180 செலவழிக்க வேண்டியிருக்கும்.

இறக்குமதியான இத்தாலி டைல்ஸ்களால் வீட்டை அலங்கரிக்க ஆசையா? ஆசைக்கு வரி கிடையாது. ஆனால் டைல்ஸ் வாங்கினால் வரி உண்டு. சதுர அடிக்கு 2500 என்று முன்னர் விற்ற டைல்ஸ் இனி ரூ. 500 கூடுதலாக 3 ஆயிரம் ரூபாயாக விலை எகிறும். அவ்வளவேதான். இதன் பொருள் 400 சதுர அடியை மார்பிளால் அலங்கரிக்கு உங்களுக்கு 12 இலட்சம் தேவை.

தங்கம் வாங்க நினைத்திருக்கிறீர்களா? தங்கம், வெள்ளி, பிளாட்டினம் என அனைத்து நகை வகைகளுக்கும் 2.5 சதவீத வரி விதிக்கப்பட்டிருக்கிறது. பத்து கிராம் ஸ்விஸ் தங்க நாணயம் வாங்க 36, 400 ரூபாய் செலவிட்டால், இனி கூடுதலாக 900 ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும். கோப ப்படாதீர்கள். புதிய இந்தியாவுக்காக இதைக் கூட செய்ய மாட்டீர்களா?


வெயில் தாங்க முடியலையே என தவித்து ஏசி வாங்க சென்றால் கவனமாக இருங்கள். கூடுதலாக பணத்தை அக்கவுண்டில் வைத்திருப்பது தர்மசங்கடத்தைத் தவிர்க்க உதவும். ஜெனரல் பிராண்டு ஏசி  பட்ஜெட்டிற்கு முன்னர் 75 ஆயிரம் ரூபாய் எனில், இனி 82 ஆயிரம் செலவு செய்தால்தான் உங்கள் வீட்டின் சுவரில் ஏறும்.

பத்திரிகைகளின் நியூஸ்பிரிண்ட் தாள் விலையேறுகிறது. கூடுதலாக, இறக்குமதி செய்யப்படும் நூல்களின் விலையும் ரூ.300 அளவுக்கு எகிறுகிறது. இதனால் இபுக் விற்பனை அதிகரிக்க கூடும்.

இறக்குமதி கார்களின் பாகங்களை மாற்றினாலும் காசு இனி எகிறும். கார்களின் பழைய வைப்பர்களை மாற்றினால்  இனி கூடுதலாக டிப்ஸ் போல ரூ.100 கொடுக்கவேண்டும்.


சிசிடிவி கேமராக்களின் விலையும் உயருகிறது. இறக்குமதி செய்யப்படும் செக்யூரிட்டி கேமராக்களின் விலை ரூ. 5,899 எனில் இனி கூடுதலாக 6,175 ரூபாய் செலவு செய்தே ஆகவேண்டும்.


லோக்கல் ஸ்பீக்கர்கள் வேண்டாம் ப்ரோ.இம்போர்ட் ஐட்டம் சூப்பர் என முணுமுணுக்கிறீர்களா? போஸ் சவுண்டுலிங்க் ஸ்பீக்கர் இனி 11500 விலையிலிருந்து 12 ஆயிரமாக உயர்ந்துள்ளது.


ஆகமொத்தம், இனி மேக் இன் இந்தியா பொருட்களை வாங்கினால் மட்டுமே நம் வங்கிக் கணக்கில் சில்லறைகளாவது மிச்சமிருக்கும். எனவே, அழுகையை அடக்கிக்கொண்டு உள்ளூர் பொருட்களை வாங்கி இந்தியாவை முன்னேற்றுங்கள்.


நன்றி: டைம்ஸ்



பிரபலமான இடுகைகள்