பிலிப்பைன்சின் போதைக்கு எதிரான போர்!
பிலிப்பைன்சில் மூன்று வயது பெண் குழந்தை, போதைப் பொருள் ரெய்டில் சிக்கி பலியானது கடுமையான போராட்டத்தை உருவாக்கியுள்ளது.
போதைப்பொருட்களை ஒழிப்பதற்கு என அதிபர் ரோட்ரிகோ தொடங்கிய திட்டம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. ஏற்கனவே போலீசாரின், மூர்க்கமான ரெய்டுகளால் பல நூறுபேர் பாபாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மைகா உல்பினா என்ற பெண் குழந்தை போலீசாரால் சுடப்பட்டு இறந்துள்ளது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் சிம்பிளாக, போதைப் பொருள் குற்றவாளிகள் அக்குழந்தையை கேடயமாக பயன்படுத்தினர் என்று கூறிவிட்டனர். இதுவரை பிலிப்பைன்சில் போதைப் பொருட்களை அழிக்கிறோம் என்று சொல்லி 6 ஆயிரத்து 600 பேர்களை போலீஸ் சுட்டுக்கொன்றுள்ளது.
யுனிசெஃப் அமைப்பு, 2018 ஆம் ஆண்டு இறந்த ஸ்கைலர், டனிகா ஆகிய குழந்தைகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு தொடங்கிய போருக்கு எதிரான திட்டத்தின் மூர்க்கமான நடைமுறையால் இதுவரை நூறு குழந்தைகள் இறந்துள்ளனர்.
நன்றி: ஹியூமன் ரைட்ஸ் அமைப்பு.