கணிதம் நடைமுறைப் பிரச்னைகளைத் தீர்க்க உதவுமா?


Image result for amel ben abda

நேர்காணல்

"கணிதம் நடைமுறை பிரச்னைகளைத் தீர்க்கவும் உதவும் "

அமெல் பென் அப்டா (AMEL BEN ABDA) 

துனிசியா நாட்டைச் சேர்ந்த கணிதவியலாளர் அமெல் பென் அப்டா, ENIT நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கணிதத்தின் இன்வர்ஸ், ரெசிப்ரோசிட்டி கேப் ஆகிய கணிதப்பிரிவுகளில் பங்களித்து வருகிறார்.

கணித ஆராய்ச்சி குறித்து ஊக்கத்தூண்டுதல்கள் உங்கள் நாட்டில் உண்டா?

நான் பதினொரு வயதில் கணிதம் மீதான ஈர்ப்பை உணர்ந்தேன். அடுத்த ஆண்டே கணிதத்தை என் வேலைக்கானதாக தீர்மானித்து அதில் கவனம் செலுத்த தொடங்கினேன். 1956 ஆம் ஆண்டு துனிசியா நாட்டுக்கு விடுதலை கிடைத்தபிறகு, கல்வியில் கவனிக்கத்தக்க முன்னேற்றங்கள் கிடைத்துள்ளன.

முதல் அதிபரான ஹபீப் பர்ஜியூபா, கல்விக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியுள்ளார். ஆனால் இதில் மாணவிகளுக்கான, பெண்களுக்கான தனி கல்வித்திட்டங்கள் கிடையாது. இங்கு மிகச்சிறந்த கணிதப்பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. துனிய கணிதவியலாளர்கள் மேல்படிப்பிற்காக பிரான்சுக்கு சென்று கல்வி கற்று நாடு திரும்புகின்றனர். இதனால் துனிசியாவில் சிறந்த கணிதவியலாளர்களின் குழு உருவாகியுள்ளது.

உங்களுடைய ஆராய்ச்சி முடிவுகள்,  நம்முடைய உலகின் பிரச்னைகளை தீர்க்கும் என நம்புகிறீர்களா?

நான் ஆராய்ச்சி செய்து வரும் ரெசிப்ரோசிட்டி கேப் தியரி, எந்திரங்கள், நீர்நிலை குறித்த ஆராய்ச்சிகளில் பயன்படுகிறது.

கணிதவியலாளர்களுக்கு துனிசியாவில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?

சுதந்திரத்திற்கு பிறகு துனிசியாவில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு பல்வேறு வாய்ப்புகள் கிடைத்துள்ளன. எங்களுடைய ஆராய்ச்சிகள் மற்றும் பயிற்சிகளுக்கு நிதியுதவிகளையும் அரசு வழங்கி வருகிறது. சூழல்கள் சிக்கலாக இருந்தாலும் அவை மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. பேராசிரியராக பாடத்திட்டங்களின் சுமை அதிகம். எனவே ஆராய்ச்சிப்பணிக்கான நேரத்தை ஒதுக்குவது கடினமாக உள்ளது. எதிர்காலத்தில் ஆசிரியர் பணியின் சுமை குறைத்து அல்லது ஆராய்ச்சிக்கான நிரந்த இடங்கள் உருவாக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

உங்களுடைய நாட்டில் உள்ள ஆராய்ச்சி அமைப்புகளைப் பற்றிக் கூறுங்களேன். 

லாம்சின்(Lamsin)  என்ற ஆய்வகம் கணித ஆராய்ச்சிக்காக நிறுவப்பட்ட முதல் ஆய்வகம். இதில் பயிற்சிபெற்ற நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் துனிசியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க பணியாற்றி வருகின்றனர்.
 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ENIT இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டி வருகிறது. லாம்சின் ஆய்வகம் பிரான்ஸ் கல்வி நிறுவனங்களோடு நெருக்கமாக தொடர்பு உள்ளதால் ஆராய்ச்சியாளர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகளும் கிடைக்கிறது.

தமிழில்: ச.அன்பரசு

நன்றி: https://www.europeanwomeninmaths.org/amel-ben-abda/ 

okayafrica - 100 women