சிபிடி ஆயில் நன்மை என்ன?

சிபிடி ஆயில்(CBD Oil)

கஞ்சா பயிரிலிருந்து எடுக்கும் எண்ணெயைப் பல்வேறு நாடுகள் பயன்படுத்த தடை விதித்துள்ளன. அப்படி பயன்படுத்தினாலும் அதில் டிஹெச்சி - டெட்ரா ஹைட்ரோ கன்னபினோல் எனும் பொருள் இருக்க கூடாது. இதன் அளவு அரசு சொல்லும் அளவில் இருப்பது அவசியம். மற்றபடி மருத்துவப்பயன்பாடுகளுக்கு பயன்படுத்த இங்கிலாந்து அரசு அனுமதித்துள்ளது.


சிபிடி எண்ணெய் , கஞ்சா விதைகளிலிருந்து பெறப்படுகிறது. இதனை உடலில் எப்படி எடுத்துக்கொண்டாலும் அது உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இந்த எண்ணெய் உணவுப் பொருட்களிலும் குளிர்பானங்களிலும் கூட சேர்க்கப்படுகிறது.

இந்த எண்ணெய் மருத்துவத் துறையில் எரிச்சலைத் தவிர்க்கவும், வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. அல்சீமர் நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

பிபிசி சயின்ஸ் போகஸ்