அட்டகாசமான க்ரைம் காமெடி - ப்ரௌச்செவரெவருவா படம் எப்படி?
ப்ரௌச்செவரெவருவா - தெலுங்கு
விவேக் ஆத்ரேயா
ஒளிப்பதிவு சாய் ஸ்ரீராம்
இசை விவேக் சாகர்
ஆஹா
இது க்ரைம் காமெடி படம். பெண்தோழிக்கு அவளின் கனவை நிறைவேற்ற உதவும் ஆண் நண்பர்களின் கதை. இதில் சிக்கி சின்னாபின்னமாகி டரியலாவதை நிறைய காமெடி, குறைந்த அழுகை, ஜாலி இசையோடு சொல்லியிருக்கிறார் ஆத்ரேயா.
ஸ்ரீவிஷ்ணு, பிரியதர்ஷி, ராகுல் ராமகிருஷ்ணன் என மூன்று பேரின் ஆர்3 காம்பினேஷன் அதிரடிக்கிறது. சீரியசான காட்சிகளிலும் ராகுலின் உடல்மொழியும் வசனங்களும் கலகல சிரிப்பு.
மித்ரா என்ற பெயரில் வந்து ஸ்ரீவிஷ்ணுவை அலைய வைக்கும் பாத்திரத்தில் நிவேதா தாமஸ், அடக்கமான நடிப்பு. மேடம் இன்னும் கொஞ்சம் உடம்பை குறைத்திருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்.
அடுத்து சத்யதேவ், நிவேதா. இயக்குநரின் கனவைத் தெரிந்துகொண்டு கதை சொல்ல வைத்து ரசித்து காதலிக்கிறார். அவர் காரை ஓட்டிக்கொண்டு சத்யதேவின் அப்பாவை பார்க்க வரும்போதே நமக்கு ஒகே தலப்பு தலப்பு சாங்கின் வேலைதான் இது என முடிவுக்கு வந்துவிடுகிறோம். மற்றபடி காதலைச் சொல்லாமல் கல்யாணம் செஞ்சுக்கலாமா என்று பேசும் நிவேதாவின் நடிப்புக்கு கன்னம் கிள்ளி லைக்ஸ் நூறு போடலாம்.
விவேக் சாகரின் இசை, லோக்கலோ, இன்டர்நேஷனலோ அனைத்திலும் அதிரடியாக புகுந்து வெளிப்படும் இசை படத்தின் பெரும்பலம். வகலாடி பாடலின் அதிரடியில் போய்க்கொண்டிருக்கும் படத்தில் தென்றலாக தலப்பு பாடல் அதிரிபோயிந்தி சாரே.
கவனிங்க ப்ளீஸ்
அப்பா, மகள் உறவைச் சொல்லுவதில் இன்னும் அழுத்தம் வேண்டும். தொடக்கத்தில் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதில் இன்னும் வேகம் இருந்திருக்கலாம். மற்றபடி கதையின் மைய பாத்திரங்கள் சந்திக்கும் புள்ளி, பரபரவென இருக்கவேண்டாமா?
இப்படி மைனஸ் சொன்னாலும் படத்தைப் பார்க்கும் போது உங்களுக்கு இவை அப்படியொன்றும் மோசமாகத் தோன்றாது. ரசித்துப் பார்க்கலாம். சாய் ஸ்ரீராமின் ஒளிப்பதிவு நிலப்பரப்புகளை அப்படி கண்ணாடி போல துல்லியமாக்கி காட்டி அதிசயம் நிகழ்த்துகிறது.
- கோமாளிமேடை டீம்.