5ஜி அலைகள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துமா?



Is 5G dangerous? © Getty Images



ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி

5 ஜி அலைவரிசை ரேடியோ அலைகள் பாதுகாப்பானதா?

ஐந்தாம் தலைமுறை ரேடியோ அலைகள், அதிக வலிமையான அலைகளைப் பயன்படுத்துவதால் பிற உயிரினங்களை பாதிக்கும் என்று பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இன்னும் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி லைசென்ஸ் கிடைக்கவில்லை. அதற்குள் 5 ஜி வந்துவிட்டது. முந்தைய 4ஜியை விட 5ஜி 20 மடங்கு அதிகவேகமாக தகவல்களை கடத்தும் திறன் கொண்டது.


வேகம் என்றால் இன்னொன்றையும் மறக்காதீர்கள். அந்த வேகத்தில் பாதியளவு காசையும் கொட்டிக் கொடுக்கத்தான் வேண்டும். இதில் சீன நிறுவனங்கள் உள்ளே நுழைந்தால் காசு குறைய வாய்ப்புள்ளது.

ரேடியோ அலைகள், மின்காந்த அலைகளின் ஒரு வகை. இதன் கூடவே புற ஊதாக்கதிர்கள், எக்ஸ்ரே, காமாக் கதிர்கள் என பல்வேறு கதிர்கள் நம் உடல்நலனை பாதிக்கக் கூடியவை.

ரேடியோ அலைகளுக்கு பொதுவாக உடலை பாதிக்கும் ஆற்றல் குறைவு. 5 ஜி அலைகள் 80 ஜிகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் செயல்படவிருக்கின்றன.

பிபிசி

பிரபலமான இடுகைகள்