கொலைகாரர்களின் மனநிலை இதுதான்!
கொலைகாரர்களின் மனநிலை
பொதுவாக கொலை என்பது ஆசை, அன்பு, பொறாமை இதன் பொருட்டுதான் நடைபெறுகிறது. பெரும்பாலும் அன்பின் மறுபக்கம் இதுபோல பொறாமை, கொலை ஆகியவை மறைந்திருக்கும். கொடூரமான கொலை நடந்திருக்கும். ஏசி வெடித்து மரணம் என்றிருந்தால், நன்றாக விசாரித்தால் அது சின்ன வயதில் தன்னை கவனிக்காமல் தம்பியை மட்டும் கவனித்தார்கள். அது நெஞ்சில் ஆறாக்காயமாக இருந்தது. பிளான் செய்து போட்டுத் தள்ளினேன் என்று கூறுவார்கள். இதெல்லாம் தந்தியில் நீங்கள் வாசித்திருப்பீர்கள்.
பொதுவாக ஆண்கள் குற்றங்களில் அதிகம் ஈடுபடுபவர்கள் என தந்தி முதல் டெக்கன் கிரானிக்கல் வரை நம்ப வைத்துள்ளனர். ஆனால் உண்மையில் அந்த குற்றங்களுக்கு பின்னணியாக பெண்களும் உண்டு என்ற உண்மையை பத்திரிகைகள் மறைத்துவிடுகின்றன. எதற்கு பெண்களின் வாழ்க்கையைக் காப்பற்றத்தான். ஆண், பெண் இருவரின் குற்றச்செயல்பாடுகளை இலண்டன் மருத்துவர் மஹ்மூத் நசிரி ஆராய்ந்தார். இவர் அரசின் என்ஹெச் எஸ் ஸில் பணிபுரிகிறார்.
பெண்கள் குற்றங்களில் கொலைகளில் ஈடுபடக்காரணம் பெரும்பாலும் சொத்துக்கள்தான். காப்பீடு, குடும்ப பெருமை, கௌரவம் ஆகியவற்றுக்காக பெண்கள் குற்றச்செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இதனையே யசோதா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் கே பிரசாந்தும் வழிமொழிகிறார். வரலாற்றுரீதியாக ஆண்கள் வலிமை வாய்ந்தவர்களாக உள்ளனர். அப்படி ஒரு எண்ணத்தை அவர்களின் மனதில் உருவாக்கியுள்ளனர். பெண்களை பிறரைக் காப்பவர்களாக நினைத்து உள்ளனர். இதுதான் இன்று நடைபெறும் பல்வேறு குற்றங்களுக்கு காரணமாக உள்ளது என்பது இவரின் கருத்து.
இன்னொருவரின் கணவர் அல்லது மனைவியை காதலுக்காக கொல்லுவது, மார்ட்டிசைடு என்று கூறுகிறார்கள். இதில் பெரும்பாலும் ஈடுபடுவது ஆண்கள்தான். பெண்களுடனான உறவில், குற்றங்களை இவர்கள் செய்கிறார்கள். உறவை இழப்பது ஆண்களுக்குச் சொத்துக்களை இழப்பது போன்று வலியான நிகழ்ச்சி. இதில் ஆண்களும், பெண்களும் ஆசையால்தான் குற்றங்களைச் செய்கிறார்கள் என்கிறார் பிரசாந்த்.
நன்றி: டிசி