பத்ம விருதுகள் 2019 - மருத்துவர்கள்
தமிழக அரசின் கலைமாமணி போல இன்னும் பத்ம விருதுகள் அரசியல் கழகங்களின் விருப்பச்சொத்தாக மாறவில்லை. அதற்கு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளே சாட்சி.
பிரதமரின் தலைமையிலான ஆறுபேர் கொண்ட கமிட்டி, பரிந்துரைகளிலிருந்து தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கிறது. இதில் பாரத ரத்னா மட்டும் விதிவிலக்கு. ஆண்டுக்கு மூன்று நபர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதை பிரதமர் நேரடியாக குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்து வழங்க உதவுகிறார். இந்த ஆண்டு சமூகத்திற்கு உழைத்த மருத்துவர்கள், விவசாயிகள், சமூகத்தலைவர்கள் ஆகியோருக்கு பத்ம அங்கீகாரம் கிடைத்துள்ளளது. இதில் சில விருதுகளை அரசியல் நோக்கம் கொண்டதாகவும் கருதலாம். அவற்றை விடுங்கள். மருத்துவத்துறையில் சாதித்தவர்களை பார்ப்போம்.
ராமஸ்வாமி வெங்கடஸ்வாமி
பேராசிரியர் ராமஸ்வாமி வெங்கடஸ்வாமி புகழ்பெற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையாளர். ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கான கழகத்தை தொடங்கியவர். தேசிய மருத்துவ அறிவியல் அகாடமிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையுடையவர்.
செரிங் நோர்பூ
ஜம்மு காஷ்மீரிலுள்ள லடாக்கில் பெண்களின் உடல்நலம் காத்த மருத்துவர். சோனம் நோர்பூ அரசு மருத்துவமனையிலும் பிற கல்வி நிறுவனங்களிலும் பங்களித்து சாதனை புரிந்துள்ளார்.
ஷியாம் பிரசாத் முகர்ஜி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் குறைவான கட்டணத்தில் மிகச்சிறப்பான சிகிச்சையை வழங்கியதற்கான அங்கீகாரமாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
டாக்டர் ரவிந்திர கோல்கே, டாக்டர் ஸ்மிதா கோல்கே
மேல்கட்டிலுள்ள பழங்குடி மக்களுக்காக உழைத்த டாக்டர் இணையர். எளிதில் மருத்துவ மையங்களை மக்கள் அணுகி சிகிச்சை பெறுவதற்கான வசதிகளை செய்தவர்கள். அம்மக்களிடம் வெறும் ரூ. 1 மட்டுமே ஆலோசனைக் கட்டணமாக பெற்றவர்கள். இதற்காகவே விருது தரலாம் அல்லவா?
சுடம் கடே
ரத்தசெல்கள் உடைவது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டு சிக்கில் செல் நோய் பிரச்னையைத் தீர்க்க முயற்சித்து வருகிறார்.
பிரதாப் சிங் ஹர்தியா:
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கண்மருத்துவர். ராஜர்ஹட்டிலுள்ள டாடா மெடிக்கல் சென்டரில் மூத்த ஆலோசகர். கண் தொடர்பான முக்கியமான ஆராய்ச்சிகளை செய்தவர்.
ஓமேஷ் குமார் பார்தி
இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் ரேபிஸ் நோய் குறித்து ஆராய்ச்சி செய்து அதன் கட்டணத்தை குறைத்துள்ளார். ஏறத்தாழ 35 ஆயிரம் ரூபாயை வெறும் 350 ரூபாயாக குறைத்து சாதனை புரிந்த அர்ப்பணிப்பான மருத்துவர்.
- mymedicalmantra.