எலிகள் பேசுவதை கேட்கலாம்!







deepsqueak_illo.jpg



எலிகள் பேசுவதைக் கேட்கும் புதுமையான கருவியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

ராட்டோ உல்லே போல நல்ல எலிகள் நம்மைச்சுற்றி கிடையாது. உணவை திருடுவது, எலி மருந்தை தின்னாமல் நம்மை ஏமாற்றுவது, ஹிட் வாங்கி அடித்தால் பெப்பே காட்டுவது என எலிகள் செய்வது ஏராளமான மாஃபியா வேலைகள். அதன் தகவல் தொடர்பை கண்டுபிடித்தால் தனுஷ் போல வெச்சு செஞ்சிருவேன் என மிரட்டலாம் இல்லியா?

அதற்காகத்தான் செயற்கை நுண்ணறிவு வரை சென்றவர்கள்

DeepSqueak எனும் மென்பொருளை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன்மூலம் எலிகளின் கீச் கீச் வாக்குவாதங்களை, கிரிமினல் திட்டங்களை கண்டுபிடித்து அதற்கு செக் வைக்க முடியும். 

எலிகள் பேசும் ஒலியின் டெசிபலை மனிதர்களால் கேட்க முடியாது. எனவே அந்த ஒலியை ஒளி வடிவில் மொழிபெயர்த்து நாம் புரிந்துகொள்ள முடியும் என்கிறார் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான ரஸ்ஸல் மார்க்ஸ். 

டீப்ஸ்க்யூக் கருவி சோனோகிராம் போல செயல்பட்டு இந்த செயல்பாட்டை மொழிபெயர்ப்பு செய்கிறது. தற்போது சோதனையில் 20 க்கும் மேற்பட்ட முறைகளில் செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆய்வு நியூரோசைக்கோ பார்மகாலஜி ஆய்விதழில் வெளியாகியுள்ளது. 

இவ்வகையில் இந்த மென்பொருளை புது முயற்சி என்று கூறமுடியாது. ஆனால் இந்த சோதனை வெற்றி பெற்றால் எலிகளின் மொழி குறித்த மர்மங்கள் உடையும் வாய்ப்பு உள்ளது. 

நன்றி:smithsonianmag.com