பற்களில் மஞ்சள் நிறம் - காரணம் என்ன?


Image result for teeth



பற்களில் மஞ்சள் நிறம்!

ஆசியர்களின் பற்கள் பொதுவாக மெல்லிய பழுப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். மஞ்சள், கருப்பு, பச்சை என ட்ராஃபிக் சிக்னலாக பல்வேறு நிறங்களைக் காட்டினால் டீ, காஃபி உள்ளிட்ட வேதிப்பொருட்களை அதிகம் பயன்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம்.

 மவுத் வாசிலுள்ள குளோரோஹெக்சைடன், சிடைல்பைரிடியம் ஆகியவையும் பற்களின் எனாமலை பாதித்து நிறத்தை மாற்றும்.
உளவியல் மற்றும் ரத்த அழுத்த மருந்துகளை பயன்படுத்துகிறீர்கள், வயதானவர் என்றால ்பற்களிலுள்ள மஞ்சள் நிறம் போகாது. மருத்துவரை நாடி எனாமலை தேய்த்து பற்களை பளபளப்பாக்கி கொள்ளலாம்.

உறக்க குறைவு, ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகியவை ஏற்பட்டால் பற்கள் கருப்பு(பாதரசம் மற்றும் சல்பைடு விளைவாகவும்) அல்லது மஞ்சளாவதை தவிர்க்க முடியாது. பற்கள் நீலநிறமாக தென்பட்டால் பற்களின் ஆயுள் முடிந்துவிட்டது என்று பொருள்.

ப்ளூரைடு நிறைந்த பற்பசையை பயன்படுத்தி தினசரி இருவேளை பல்துலக்குவது கிருமிகளிடமிருந்து பாதுகாக்க உதவும். டீ, காபி குடித்தபின் மறக்காமல் வாய் கொப்பளிப்பது பற்களில் கறைபடுவதை தடுக்கும்.




பிரபலமான இடுகைகள்