சந்தோஷ புத்தகங்கள்! - ஜனவரி ரிலீஸ்
ஜனவரி ஜனுஹேரி என இந்த ஆண்டுக்கான ட்ரெண்டுகள் கிளம்பிவிட்டன. ஜனவரி மாதத்திற்கான புத்தகங்களும் வெளியாகத்தொடங்கிவிட்டன. அதில் சில நூல்கள்:
விழிகள் தெறிக்கும் நேரம் வரை படிப்பு, கடிகாரமுள் ஓவர்டைம் பார்க்கும் வேலை, தொந்தி தள்ளும் வயிறு, பேங்க் பேலன்ஸைக் காட்டி அந்தஸ்தான கல்யாணம் என இவை இருந்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமா?
ஹேப்பி எவர் ஆஃப்டர் நூலாசிரியர் பால் டோலன், இவற்றை மறுத்து தன் எழுத்து வழியே புது வழி காட்டுகிறார். வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு விதம் எனும்போது மேலே சொன்ன விஷயங்கள் எப்படி அனைவருக்கும் ஒன்றுபோல செட்டாகும் என யோசிக்க வைக்கிறது .
உலகெங்கும் நியூஸ் எங்கில்லை. பாரம்பரிய சேனல்கள், பத்திரிகைகள் தாண்டி சமூகவலைதளங்கள் புதிய செய்திகளைச் சொல்லும் அதிவேக ஊடகங்களாகி பல ஆண்டுகளாகிவிட்டன. இந்த செய்தி சுனாமிகளிடமிருந்த நமக்கான அந்தர உலகைக் காப்பாற்றி எப்படி வாழுவது என்பதை ஆசிரியர் மேட் ஹைக் சொல்லுகிறார்.
சந்தோஷம் எப்படி உருவாகிறது என யோசித்திருக்கிறீர்களா? தந்தி முதல் தினகரன் வரை இதனை எப்படி அணுகி கட்டுரை எழுதுவார்கள்? டோபமைன், செரடோனின் என அறிவியல் முறையில்தானே பேசவேண்டும். அதைத்தான் மூளை ஆய்வாளர் டீன் பர்னெட் , தான் செய்த ஆராய்ச்சி வழியாக பேசுகிறார். இது சுய முன்னேற்ற நூல் அல்ல. மகிழ்ச்சி என்பது என்ன என்று புரிய வைக்கிறார் அவ்வளவே.
டேனிஷ் மக்கள் எப்படி சந்தோஷமாக இருக்கிறார்கள்? அதற்கு காரணம் என்ன? என்பதை கோபன்ஹேகனில் மகிழ்ச்சிக்கான ஆராய்ச்சிக்கழகம் வைத்துள்ள மெய்க் வைகிங் விளக்கியுள்ளார். சந்தோஷமாக வாழ எது அவசியம், எது தேவையற்றது என்பதை அறிய முக்கியமாக வாசிக்க வேண்டிய நூல் இது.
நன்றி: சயின்ஸ்ஃபோகஸ்