வேலை முக்கியமா? தேர்தல் முக்கியமா?



Image result for lost votes




தேர்தல் வந்துவிட்டது. மோடி அதற்காக தமிழர்களுக்கு முன்னதாகவே பொங்கல் வாழ்த்து சொல்லிவிட்டார். ஆனால் இப்போது புதிய பிரச்னை தேர்தல் ஆணையத்துக்கு முளைத்திருக்கிறது. அது வேலைக்காக இடம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களை எப்படி ஓட்டு போட வைப்பது என்பதுதான்.


2001ஆம் ஆண்டு சென்சஸ்படி 33 மில்லியன் மக்கள்(ஒரு மில்லியன் = பத்து லட்சம்) 8.1 சதவீதம் தொழிலாளர்கள் பொருளாதார காரணங்களுக்காக இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவிக்கிறது. இதில் எண்பது சதவிகிதத்தினர் ஆண்கள்.

தற்போது இந்த எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. இடம்பெயர்ந்த வாக்காளர்களின் அளவு 29 சதவிகிதம் எனுமளவு இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2011 சென்சஸ்படி 482 மில்லியன் அளவிலான மக்களின் எண்ணிக்கை தற்போது 500 மில்லியனுக்கும் மேல்(2016) அதிகரித்துள்ளது. இது 20 சதவிகிதத்திற்கு அதிகமான வளர்ச்சி.

டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களிலேயே பெரும்பாலான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். உ.பி, ம.பி, பீகார் தொழிலாளர்கள் மேற்சொன்ன மாநிலங்களில் அதிகம் வேலை செய்கின்றனர். கொல்கத்தாவில் வேலை செய்பவர்களில் ஜார்க்கண்ட், உ.பி. ஒடிஷாவைச் சேர்ந்தவர்கள் அதிகம்.


கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகள் - 171.7 மில்லியன்

காங்கிரஸ் - 106.9 மில்லியன்

பிற எட்டு கட்சிகள் - 130.3 மில்லியன்





பிரபலமான இடுகைகள்