இந்திய அணி சிறந்த அணியா என்று தெரியவில்லை



Image result for kapil dev illustration



எண்பதுகளில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் விளையாடியதற்கும் இப்போது விளையாடியதற்கும் என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள்.

இன்றைய வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள். நல்ல வலிமையாக இருக்கிறார்கள். மேலும் இதில் ஒப்பீடு தேவையில்லை. அணிக்கு என்ன  தேவையோ, அதனை அளிக்க தயாராக இருக்கிறார்கள். டெஸ்டில் ஜெயிக்க தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என்பதை இந்திய அணி உணர்ந்திருக்கிறது. இருபது விக்கெட்டுகளை சாய்க்கும் திறன்கொண்ட வீரர்கள் அணியில் இருக்கிறார்கள்.

ஆல் ரவுண்டராக இருப்பதன் சவால்கள் என்னென்ன?

கிரிக்கெட்டை ஆறுமாதங்கள் விளையாடுகிறீர்கள் என்றால் அனைத்து துறைகளிலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அதுவே பத்து மாதங்களாகும்போது பந்து வீச, பேட்டிங், பீல்டிங் என பல்துறையிலும் உங்களை தக்க வைக்க போராட்டம் தொடங்கிவிடும். என்னால் இவற்றை இயல்பாக சமாளிக்க முடிந்தது இயற்கையின் இறைவனின் கருணை என்றுதான் கூறவேண்டும்.

காயங்களை எப்படி சமாளித்தீர்கள்?

சிறிது இடைவெளி எடுத்து பயிற்சிகளை எடுத்துக்கொண்டால் போதும். ஆனால் இப்போதைய அணி இதுபோல சொகுசை விரும்புவதில்லை.

நீங்கள் பந்துவீசியதில் உங்களுக்கு பிடித்த வீரர்யார்?

விவியன் ரிச்சர்ட்ஸ். இதற்குமேல் ஏன் என்று கேட்காதீர்கள்.

விராட் கோலி கூறியதுபோல இந்த டீம் பெஸ்ட் டீம் என கூறுகிறீர்களா?

இல்லை. இதுபற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. அதை பத்திரிகையாளர்களான நீங்களே தீர்மானியுங்கள். வேகப்பந்துவீச்சு வீரர்களைக் கொண்ட இந்த அணி சிறப்பானது. இந்த வேகத்தை அவர்கள் அப்படியே வைத்திருந்தால் எதிர்காலத்தில் மிகச்சிறப்பான அணியாக உருவாகி வளர்வார்கள் என்பது உறுதி.



தமிழில்: ச.அன்பரசு

நன்றி: இந்திரனில் பாசு, தி டைம்ஸ் ஆப் இந்தியா






பிரபலமான இடுகைகள்