வாக்களிப்பதை அதிகரிக்க என்ன செய்யலாம்?




Image result for lost votes times of india

வாக்களிப்பதை அதிகரிக்க பல்வேறு யோசனைகளை டாடா சமூக அறிவியல் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. அதில் சில.,

இடம்பெயர்ந்த தொழிலாளர் என்றாலும் அவர் இருக்கும் சட்டசபை, நாடாளுமன்றத் தொகுதியில் தன் பெயரை இணைத்துக்கொண்டு வாக்களிக்கலாம்.

அரசியல் கட்சிகள் வாக்களிப்பதற்கான பல்வேறு முயற்சிகளை செய்யலாம். அஞ்சள்,வாக்களிப்பதற்காக பதிலி ஒருவர், இணைய வாக்கு ஆகியவற்றை செயல்படுத்த தேர்தல் ஆணையத்தை கோரலாம்.

வேலைவாய்ப்புக்காக அவ்வப்போது மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து ஊர் திரும்பும் தொழிலாளர்களை அட்டவணைப்படுத்தலாம்.  இதன் மற்றொரு சிந்தனையாக, வெளி மாநில தொழிலாளிகளுக்கான தகவல் தளத்தை உருவாக்கலாம்.


வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைத்தால் முடிந்தது. ஓட்டுநர் உரிமத்தை, தொலைபேசி எண்ணை, பான் எண்ணை, வங்கி எண்ணை ஏன் வாடகைக்கு இருக்கும் வீட்டு எண்ணைக்கூட இணைத்திருக்கிறோம். கூடுதலாக இதையும் இணைத்தால் ஒன்றும் கெட்டுப்போகாது.

பல்வேறு மொழிகளைக் கொண்ட கால் சென்டரை திறந்து தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அந்நிய மாநிலங்களிலும் வழங்கலாம். விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

அரசுவிதி 20 படி, தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் இடத்தில் முகவரியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து மக்களவை மாநிலங்களவை தேர்தலில் வாக்குகளை செலுத்தலாம். ”தினசரி வேலை தேடி அலைந்து பசியாறுபவர்கள், முகவரிச்சான்றை எடுத்து வாக்களிக்க பதிவு செய்துகொண்டிருப்பார்களா? எந்த முதலாளியும் தேர்தலுக்காக விடுமுறை கொடுப்பதில்லை. அதற்கென சொந்த ஊருக்கு நெடும்பயணம் மேற்கொள்ளவும் தொழிலாளர்கள் தயாராக இல்லை என்பதே யதார்த்த உண்மை” என்கிறார் முன்னாள் தேர்தல் ஆணைய தலைவர் ஒருவர்.

இந்தியாவில் வீடற்ற குடிமகன்களுக்கு தேர்தலில் அவர்களுக்கு பதில் பதிலியாக ஒருவர் வாக்களிக்கும் வசதியை கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்திய அரசு அமல்படுத்தியது. ஆனால் இந்த வசதி இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு கிடையாது என்பது அவல உண்மை.

இடம் பெயரும் தொழிலாளர் என்பதை எப்படி உறுதி செய்வது, எத்தனை நாட்கள் வேலை செய்தால் அவர் இடம்பெயர்ந்த தொழிலாளர் என உறுதி செய்வீர்கள் என கேள்விகளைக்கேட்டு மிரட்டுகிறார் முன்னாள் தேர்தல் ஆணையரான ஓபி ராவத்.


தேர்தல் ஆணையம் இதற்கென தனி பூத் அமைத்து வாக்களிக்கும் எந்திரங்களை அமைப்பது பெரும் சவாலாக இருக்கும். தபால் வாக்குகளை எண்ணுவதற்கே தேர்தல் ஆணையம் தடுமாறி வருகிறது. எதிர்காலத்தில் இணைய வாக்கு அமலுக்கு வரலாம்.

தமிழில்: ச.அன்பரசு
ஆங்கில மூலம்: பரத் ஜெயின், தி டைம்ஸ் ஆப் இந்தியா









பிரபலமான இடுகைகள்