நாட்டின் முடிவுகளில் பெண்களுக்கு பங்கில்லையா?
நடுவிலுள்ள பெண் தாரா கிருஷ்ணமூர்த்தி |
நேர்காணல்
தாரா கிருஷ்ணசாமி, பெண் உரிமை ஆர்வலர்.
அரசியலுக்கு பெண்கள் வரவேண்டுமென ஏன் கூறுகிறீர்கள்?
பெண்கள் நிறையப்பேர் எம்எல்ஏ, எம்பியாக உருவாவது அவசியம். சுதந்திரமாகி எழுபது ஆண்டுகளாகியும் மக்களவையில் பெண்களுக்கு 11 சதவிகித இடம்தான் உள்ளது. மாநில சட்டமன்றத்தில் 9 சதவிகித இடம்தான் உள்ளது. மிசோரம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் பெயருக்கு கூட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கிடையாது. நாட்டின் முக்கிய தீர்வுகளில் பெண்களுக்கான பங்கே இல்லாமல் போனால் என்னாகும்? பாலின பாகுபாடாக உங்களுக்கு தெரியவில்லையா?
பெண்களை அரசியலுக்கு இழுக்க இது சரியான நேரமா?
இது இந்தியக்குடிமக்கள் அனைவருக்கும் அரசியலமைப்பு உறுதியளித்த உரிமைகள். மீடூ முதல் பெண்ணுரிமைகள், அரசியல் சமநிலை என அனைத்தையும் பெற பெண்கள் தகுதியானவர்கள்தான். ஆனால் அதிகாரமளிக்க பயப்படுபவர்கள், பெண்கள் மீது அவதூறுகளை அள்ளி இறைக்கின்றனர்.
பெண்கள் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. அதனால் அவர்கள் அரசியலுக்கு வரவில்லை என புரிந்துகொள்ளலாமா?
அரசியல் கட்சிகளில் லட்சக்கணக்கான பெண் தொண்டர்கள் உண்டு. 8 சதவிகிதம் வரையிலான பெண்கள்தான் வேட்பாளர்கள். உள்ளூர் அமைப்புகளில் 5 லட்சத்திற்கும் அதிகமாக பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதில் பத்து சதவிகிதம் பேர்தான் இதைத்தாண்டி வர நினைக்கிறார்கள். பெரும்பாலோர்க்கு சமையலறையே வாழுமிடமாகிவிடுகிறது.
நீங்கள் கூறியபடி தேர்ந்தெடுக்கப்படும் பெண்களும் டம்மியாகத்தானே இருக்கிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் ஆண்கள் கூட யாரோ ஒருவரின் சொந்தமாகவோ, ஊரிலுள்ள முக்கிய ஆதிக்க சாதியைச் சேர்ந்தவராகவோ இருக்கலாம். அதற்காக அவர்களை டம்பி என்பீர்களா? தேர்ந்தெடுக்கப்படும் பெண் உறுப்பினர்களை நீங்கள் ஆதரித்தாலே அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும்.
பெண்களால் ஜெயிக்க முடியாது. அதனால் கட்சிகள் டிக்கெட் கொடுக்க முடியாது என கூறுகிறார்களே?
தேர்தல் ஆணைய புள்ளிவிவரம் வேறுவிதமாக கூறுகிறது. மக்களவைத் தேர்தலில் பெண்களின் வெற்றி சதவீதம் 20 சதவீதம். இது பெண்களை விட அதிகம்தானே?
அவர்கள் அரசில் செயல்படும் தகுதியைப் பெற்றிருப்பதாக நினைக்கிறீர்களா?
கடந்த 25 ஆண்டுகளாக பஞ்சாயத்து தேர்தல் விவரங்களை எடுத்து பாருங்கள். 1992-2012 காலகட்டத்தில் பெண்கள் தலைவர்களாக உள்ள தொகுதியில் பொருளாதார வளர்ச்சி 15 சதவிகித த்திற்கும் மேல் உள்ளது. ஜிடிபியில் 1.8 சதவிகித வளர்ச்சியும் காட்டியுள்ளனர். இதில் 53 சதவிகிதம் பேர் பட்டதாரிகள் என்பதை மறக்காதீர்கள்.
தமிழில்: ச.அன்பரசு
நன்றி: அமுல்யா கோபாலகிருஷ்ணன், தி டைம்ஸ் ஆப் இந்தியா.