மினிமலிச சிந்தனை - கற்க வேண்டியது என்ன?




Image result for marie kondo


மினிமலிச சிந்தனை



Image result for marie kondo


அறையில் இரண்டு பேர்தான் இருப்பார்கள். ஆனால் நான்குபேர்களுக்கான பொருட்களை வைத்திருப்பார்கள். அது பிரச்னையில்லை. ஆனால் நடமாட இடம் வேண்டுமே? இதற்காகவே மினிமலிசம் கலாசாரம் நடைமுறையில் பிரபலமாகி வருகிறது. இதுகுறித்து குங்குமத்தில் நான் எழுதிய கட்டுரையை யாரும் படித்திருக்க மாட்டீர்கள். உண்மையைச் சொல்லித்தானே ஆக வேண்டும்.

வெரி வெல், பிரச்னையில்லை. உலகமெங்கும் மினிமலிச சிந்தனையைப் பரப்பும் சிந்தனையாளர்களின் அணிவகுப்பு இதோ...


மேரி கோண்டோ

ஜனவரி முதல் தேதியிலிருந்து நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் தொடர் இது. மேரி எப்படி தன் கிளைண்ட்களின் வீட்டை குப்பைகளை குறைத்து எளிமையாக்குகிறார் என்பதே இத்தொடர். வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

ஃப்யூமியோ சசாகி

பெங்குயின் பதிப்பகத்தில் குட்பை திங்க்ஸ் ஆன் மினிமலிஸ்ட் லிவ்விங் என புத்தகம் போட்டிருக்கிறார்.

டோக்கியோவில் வசிக்கும் இளைஞரின் வாழ்க்கை எப்படி மினிமலிச கருத்துக்குள் வருகிறது, அதன் விளைவுகள் என்ன , சமூகம் அதனை எப்படி பார்த்தது என்பதை புட்டு வைத்திருக்கிறார். புக் விலை ரூ. 500. கல்வி வேலை வழிகாட்டி நிருபரான வெங்கடசாமி புத்தக விலையை சொன்னதும் வாங்க மாட்டார் என நம்புகிறேன்.

மினிமலிசம் ஆவணப்படம்

படமே எடுத்துட்டாங்களா என அதிர்ச்சி அடையாதீர்கள். புகழ்பெற்ற மினிமலிச ஆளுமைகளான ரியான் நிகோடெமஸ் மற்றும் ஜோஸூவா ஃபீல்ட்ஸ் என இரு நண்பர்களும் 2013 ஆம்ஆண்டு இயக்குநர் மேட் டி அவெல்லாவை அணுகி தங்கள் நூலை கொடுத்து படிக்க சொன்னார்கள். அதன் விளைவாக 2016 ஆம் ஆண்டு எவ்ரிதிங் தட் ரிமைண்ஸ் ஆவணப்படம் வெளியானது. மினிமலிச சிந்தனை எப்படி உளவியல் ரீதியாகவும் ஒருவருக்கு உதவுகிறது என்பதே படம் சொல்லும் கருத்து .

தி கிரவுண்ட் அப் ஷோ(Podcast)

மேலே பத்தியில் சொன்ன இயக்குநரின் சேனல் இது. நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், ராப் பாடகர்களை கூப்பிட்டு சூழலுக்கு இசைவான வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகள், சவால்கள், தீர்வுகளை முன்வைத்து பேசும் நிகழ்ச்சி. மன் கீ பாத்தை விட சுவாரசியமாக இருக்கும் அதனால் கேட்கலாம். தப்பில்லை.

தி வோல் ஹேப்பி லைஃப்


கனடா இந்தியரான ரியா, உடலையும் உள்ளத்தையும் பாதுகாக்க உருப்படியாக சாப்பிட வேண்டிய உணவுகளைப் பற்றி, டயட்டை பற்றி பேசுகிறார். யூட்யூபில் வாய்ப்பிருந்தால் பார்த்து பயன் பெறுங்கள். 

தமிழில்: ச.அன்பரசு
நன்றி: லிவ் மின்ட் - சோமக் கோசல்