உணவு டெலிவரி இனி நாயின் கையில்
உணவு வழங்கும் ரோபோ நாய்!
உணவை ஸ்விக்கியிலிருந்து மனிதர்கள்தான் வழங்கவேண்டுமா? கான்டினென்டல் கார்ப்பரேஷன் - எனிபாட்டிக்ஸ் கம்பெனியின் முயற்சியாக நாய்கள் உணவை வழங்கவிருக்கின்றன. இவை ரோபோ நாய்கள் என்பதால் ரேபிஸ் குறித்து அஞ்ச வேண்டாம்.
லாஸ்வேகாஸில் நடந்த எலக்ட்ரானிக் ஷோவில் இந்த நாய்க்கு டெமோ கொடுக்கப்பட்டது. இந்த நாய்களுக்கு ANYmals என்று பெயர். டெமோவில் ரோபோ நாய்கள் மேலே தாவி கதவின் காலிங்பெல்லைக் கூட அடித்து பதற்றம் ஏற்படுத்தின. எங்கிருந்தாலும் டெலிவரி செய்வோம் என அடித்து பேசுகிறது கான்டினென்டல் நிறுவனம். ரோபோ நாய்கள் தயாரிப்பில் போஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது.
நன்றி: futurism