பொது பயன்பாட்டு ஆங்கில நூல்கள்!

iStock.com/hocus-focus


புத்தகங்களுக்கான காப்புரிமை என்பது நூறு ஆண்டுகள் என்பது உங்களுக்கு தெரியும். தமிழில் உப்புமா பதிப்பகங்கள் இப்படிப்பட்ட நூல்களை தேர்ந்தெடுத்து தட்டச்சு கூட செய்யாமல் ஸ்கேன் செய்தே நூல்களை அச்சிட்டு விற்று லாபம் பார்க்கின்றனர். இதில் நூலக அதிகாரிகளின் ஆதரவும் உண்டு. 

ஆங்கிலத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான  ஆல்டோஸ் ஹக்ஸ்லே, டி.ஹெச். லாரன்ஸ், வர்ஜீனியா வுல்ஃப் ஆகியோரின் நூல்களை இனி நீங்கள் இபுக் வழியாக தரவிறக்கி படிக்கலாம். விலையின்றி என்பதுதான் இதில் முக்கியமானது. 1923 ஆம் ஆண்டு எழுதிய நூல்களை இம்முறையில் படிக்கலாம். அடுத்த ஆண்டும் இதேபோல நூல்கள் காப்புரிமை முடிந்து பப்ளிக் டொமைனில் வருகின்றன.

1923-77 வரையில் பதிப்பிக்கப்பட்ட நூல்களை இம்முறையில் சட்டப்பூர்வ முறையில் இலவச நூல்களாக தரவிறக்கி படிக்கும் வாய்ப்பு உள்ளது. 

Jacob’s Room by Virginia Woolf, The Murder on the Links by Agatha Christie, The Prophet by Kahlil Gibran, The World Crisis by Winston ChurchillDon Quixote by Miguel de Cervantes, Alice’s Adventures in Wonderland by Lewis Carroll, The Three Musketeers by Alexandre Dumas உள்ளிட்ட நூல்களை நீங்கள் குற்ற உணர்வின்றி படிக்கலாம்.  நூல்களை மட்டுமல்ல சார்லி சாப்ளினின் தி பில்கிராம், டென் கமாண்டென்ஸ் உள்ளிட்ட படங்களையும் காப்புரிமை பயமின்றி பார்க்கலாம் என மதர்போர்டு வலைத்தளம் தகவல் தெரிவிக்கிறது. முயன்று பாருங்கள்.