கண்பார்வையற்றவர்களுக்கு ஹல்லுசினேசன் உண்டா?
Steemit |
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி
கண் பார்வையற்றவர்களுக்கு ஹல்லுசினேசன் தன்மை உண்டா?
கண்பார்வையற்றவர்களுக்கு மாயத்தோற்றம் என்பது மிக சாதாரணமான ஒன்று. உலகில் பதினைந்து சதவீதம் பேருக்கு சார்லஸ் போனட் சிண்ட்ரோம் என்ற பிரச்னை உள்ளது. பொதுவாக ஒருவருக்கு கண்களின் பார்க்கும் காட்சிகள் ஹாத்வே இன்டர்நெட் கனெக்ஷன் வேகத்தில் மூளைக்குள் செல்லும். ஆனால் இந்த கண் நரம்புகள் பாதிக்கப்படும்போது மூளை தவித்துப் போய்விடும். இதனால் பார்த்த காட்சிகள், ஒலிகள் ஆகியவற்றைக் கொண்டு இழந்த கண்களின் இடத்தை தானியங்கியாக பூர்த்தி செய்யத் தொடங்கிவிடும்.
மாயத்தோற்றம் உருவாவது இதனால்தான். சார்லஸ் போனட் சிண்ட்ரோம் என்பது சுவிஸ் இயற்கை ஆய்வாளர், தன் தாத்தாவிடம் நோய் அறிகுறியைக் கண்டுபிடித்து சொன்ன நன்றிக்காக வைக்கப்பட்ட பெயர்.
முகங்கள் வானில் பறப்பது போல, குரங்குகள் நடனமாடுவது போன்ற காட்சிகள் தனக்கு தெரிந்ததாக பார்வையற்றோர் மருத்துவர்களிடமும் ஆய்வாளர்களிடமும் கூறியுள்ளனர்.
நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்