நீங்களும் வங்கி தொடங்கலாம் எப்படி?


Image result for bank illustration
123RF.com




உள்ளூர்ப்பகுதி வங்கி தொடங்குவது எப்படி?

பாரத ரிசர்வ் வங்கி இந்தியா முழுக்க ஏராளமான கிளைகளை தொடங்கி செயல்பட்டு வருவதை கண்டிருப்பீர்கள். சில மாவட்டங்களிலுள்ள வங்கிகளுக்கு வேறு இடங்களில் கிளைகள் கூட இருக்காது. காரணம், இவை குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் செயல்படும் லோக்கல் வங்கி. செந்தமிழில் ரிசர்வ் வங்கி இதனை உள்ளூர்ப்பகுதி வங்கிகள் என குறிக்கிறது.

பல்லாண்டுகளாக நிதிச்சேவைகளை வழங்கி வந்த நிறுவனங்களுக்கு வங்கிச்சேவை அளிக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்து வருகிறது. உள்ளூர் வங்கி தொடங்குவதற்கு முன்பாக குழுமங்கள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது அவசியமில்லை. ஆனால் ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறுவது மிக முக்கியம்.

மக்களுக்கான வங்கி!


விண்ணப்பத்தில் இணைக்கப்படக் கோரும் ஆவணங்களை இணைத்து வங்கி வாரியக்குழு, தலைவர் ஆகிய தகவல்களுடன் ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி கிடைத்தபின், குழுமங்கள் பதிவாளரிடம் வங்கிப்பெயரை பதிவு செய்யலாம். உள்ளூர்வங்கியை குறைந்தது 4 லட்சம் பேர் உள்ள கிராமத்தில் அல்லது குறுநகரத்தில் தொடங்கலாம். பின்தங்கிய நகரில் தொடங்குவது சிறப்பு. மூன்று மாவட்டங்களை வங்கியின் செயல்பாட்டு எல்லையாக வகுத்துக் கொள்ளலாம்.


முதலீட்டுக்கு யார் பொறுப்பு?

வங்கிக்கான முதலீட்டு தொகையை(ரூ.5கோடி) ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முழுமையாக வழங்க முடியாது. நாற்பது சதவீதம் மட்டுமே குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்களும், மீதி தொகையை குடும்பம் சாராத பிறரும் வழங்கவேண்டும் என்பது ரிசர்வ் வங்கி விதி.  முதலீட்டுத்தொகைக்கான கணக்காயர் சான்றிதழ் அவசியம் தேவை. இது குறித்த சந்தேகங்களை 1996 ஆம் ஆண்டு ஆக.24 அன்று வெளியான ரிசர்வ் வங்கியின் அச்சக வெளியீட்டில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

நன்றி: தினமலர் பட்டம்