மனிதர்களுக்கு புலி எதிரி அல்ல!






Image result for tiger


மறையும் புலிகள்!

தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் தகவல்படி 2018 ஆம் ஆண்டில் மட்டும் 95 புலிகள் இறந்துள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதில் 41 புலிகள், அதன் காப்பகத்திற்கு வெளியே இறந்துள்ளன. புலிகள் அதிகம் மரணிப்பதில் முன்னிலை வகிப்பது மகாராஷ்ரா மாநிலம். இவ்வாண்டில் மட்டும் பதினெட்டு புலிகள் இறந்துள்ளன. இறப்பு சதவிகிதம் 34. புலிகளின் உடல்கள் மற்றும் அதன் உடல் உறுப்புகள் சேகரிக்கப்படுவதை தேசிய புலிகள் காப்பக ஆணையம் கவனமாக பதிவு செய்துவருகிறது. “மகாராஷ்டிராவில் புலிகள் காப்பகத்திற்கு வெளியே 74% புலிகள் வாழ்வதுதான் அவற்றை பாதுகாக்க முடியாததன் காரணம்” என்கிறார் காப்பக ஆணைய செயலர் அனுப்குமார் நாயக். 2014 ஆம் ஆண்டு கணக்குப்படி 190 புலிகள் மகாராஷ்டிராவில் இருப்பதாக தகவல்தளத்தின் செய்தி கூறுகிறது.

புலிகள் இறப்புக்கு முக்கியக்காரணம், மனிதர்கள் புலிகளை எதிரியாக நினைத்து தாக்குவதுதான். மகாராஷ்டிராவை அடுத்த மத்தியப்பிரதேசம்(22), கர்நாடகா(15) மாநிலங்களில் அதிக புலிகள் இறந்துள்ளன. மூன்று மாநிலங்களில் இறந்த புலிகளின் எண்ணிக்கை 60%.

பிரபலமான இடுகைகள்