நாய் படுக்கைக்கு கீழே பதுங்குவது ஏன்?




Related image
thrillist.com





ஏன்?எதற்கு?எப்படி?

நாய்கள் திடீரென படுகைக்கு கீழ் பதுங்குவது ஏன்?


காலையில் பாசமாய் தன் பாலுறுப்பை நக்கிய வாயுடன் நம் முகத்தையும் நக்கி பாசம் காட்டுவதில் நாய்க்கு இணை யாருமே இல்லை. ஆனாலும் சில சமயங்களில் பொன்னுசாமி ஹோட்டல் பிரியாணி வாங்கித்தாரேன் என்றாலும் வராமல் வம்பு பண்ணி படுக்கைக்கு கீழ் பதுங்கும் நம் வீட்டு பப்பி. அதற்கு என்ன காரணம்?

ஆபத்தில்லாத குணம்தான். படுக்கைக்கு கீழே நாய்கள் கிடையைப் போட காரணம், தொந்தரவில்லாத சமரசமே செய்ய முடியாத தூக்கத்திற்குத்தான். இல்லையென்றால் நீங்கள் பந்தை போட்டு நாயை தூக்கிவரச் சொல்வீர்கள். மனிதர்களே 9-5 என மாறிய பிறகு நாய் மட்டும் என்ன ஓவர்டைம் வேலை பார்க்குமா என்ன?

ஆனால் அதேசமயம் இருட்டு ஸ்பாட்டில் உட்கார்ந்துகொண்டு ஹீமேன் காமிக்ஸின் நாய் போல நடுங்கிக் கொண்டிருந்தால் ஆபத்து. நாய் பொதுவாக அதிக இரைச்சல், புதிய மனிதர்களுக்கு அஞ்சும். இந்த வகையில் பூனை மிக வெளிப்படையாக தன் விரக்தியை கோபத்தை வெளிக்காட்டி ஓடிவிடும். ஆனால் நாய் அப்படி செய்யாது.

பட்டாசு சத்தம், தோப்பில் தேங்காய் போடும் சத்த த்திற்கெல்லாம் நாய்க்கு ஹைப்பர் டென்ஷன் ஏற்பட்டால் சத்தியமாக பக்கத்திலிருக்கும் கால்நடை மருந்தகத்திற்கு கூட்டிச்சென்று பார்மசியில் மருந்து வாங்கி டாக்டருக்கு சிகிச்சைக் கூலி கொடுத்து அதனை நலமாக்குவது நல்லது. கூடவே இதற்கான சில பயிற்சிகளும் உண்டு. இல்லையென்றால் நாய் உங்களை பாதுகாக்காது. நீங்கள் அதனைப் பாதுகாப்பது போல நிலைமை மாறும்.

நன்றி-மென்டல் ஃபிளாஸ்