சுறாக்கள் மனிதனை நீரில் அடையாளம் காண்பது எப்படி?
ஏன்?எதற்கு?எப்படி?
மிஸ்டர்.ரோனி
சுறாக்கள் எப்படி மனிதர்களை நீரில் அடையாளம் காண்கின்றன?
நாம் சூப்பர் மார்க்கெட்டுகளில் காய்கறி டிவிஷன்களை எப்படி அடையாளம் காண்கிறோம். சூப்பர் விற்பனைப் பெண் அங்கு நிற்கிறாள் என்பதை வைத்தா? கிடையாது. பழவாசனை, கீரைக்கட்டிலுள்ள மண்ணின் மணம், கருவேப்பிலையின் வேறுபட்ட மணம், உருளைக்கிழங்கின் வினோத மணம் என பல விஷயங்கள் இருக்கிறதல்லவா? அதேதான்.
சுறாக்கள் ஒரு கி.மீ தொலைவுக்கு முன்னரே நம்மை கண்டுபிடித்துவிடும் என்று கூறுவதெல்லாம் பூ என்று சொல்லி கற்பனையாகவே நம்மை நம்பவைக்கும் கதை. இரைதேடும் சக்தியைப் பொறுத்தவரை சுறாக்களும் பிற மீன்களும் ஒன்றுபோல்தான் இருக்கும். ஆனால் சில சுறாக்கள் சூட்டிகையாக மனிதர்களைக் கண்டுபிடித்து தாக்குவதற்கும், அதன் மோப்பத்திறனுக்கு எந்த சம்பந்தமுமில்லை.
நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்