வயதாவது என்பது நோயா?




Is age an illness? © Getty Images






ஏன்?எதற்கு?எப்படி?

மிஸ்டர். ரோனி

வயதாவது என்பது நோயா?

இயற்கையின் பரிமாண வளர்ச்சி அது. விலங்குகளுக்கு அவற்றின் ஆயுளைப் பொறுத்து அதன் வளர்ச்சி அறிவுத்திறன் கூடும். நமக்கும் அதேபோல்தான். நம் செல்கள் தினசரி இறந்து புதுப்பிக்கப்படுகின்றன. உடலின் செல்கள், ரத்தம் என அனைத்தும் இதேபோல்தான். இயற்கையின் அமைப்பு அப்படி அமைகிறது. இதனைத் தாண்டிய நாம் வாழும் சூழல், தாக்கும் நோய்கள், உண்ணும் உணவு ஆகியவையும் செல் பிறந்து இறப்பதில் தாக்கம் செலுத்துகின்றன.

நோய்களை சந்திக்காமல் தடுப்பூசி போட்டால் அதிக நாட்கள் வாழ்ந்துவிடலாம் என்ற கனவு வேண்டாம். Myotis lucifugus என்ற வௌவால் எதிரிகளே இல்லாமல் 30 ஆண்டுகள்  வாழ்கிறது. எலியை பல்வேறு எதிரிகள் கொண்ட சூழலில் வாழ வைத்தால் ஐந்து மாதங்களே தாக்குப்பிடித்தது. அதேசமயம் ஆய்வகத்தில் வைத்து பராமரித்ததில் மூன்று ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்தது.

    பிரபலமான இடுகைகள்