கும்பமேளா குப்பை - அரசு என்ன செய்யப்போகிறது?

கும்பமேளா குப்பை
பிரக்யாராஜில் கும்பமேளா அமர்க்களங்கள் தொடங்கிவிட்டன. தற்காலிகமாக ஒரு நகரமே இவ்விழாவுக்காக அமைக்கப்படுகிறது. காந்தியின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவுக்கான கொண்டாட்டங்களும் கும்பமேளாவில் இடையில் உண்டு.
பத்து கோடி மக்கள் கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊடகங்கள் 20 லட்சம் பேர் என கணித்துள்ளது.
அரசு இதற்கு என்ன செய்கிறது? 1.2 லட்சம் கழிவறைகள், 500 சுகாதார பணியாளர்கள், 1,500 தன்னார்வலர்கள் என திட்டமிட்டுள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதனைக் கண்காணித்தாலும் எப்படி மக்கள் திரளைச் சமாளித்து குடிநீர் தரத்தை மேம்படுத்துவார்கள் என்பது இன்னும் புரியவில்லை. கழிவறைகளை அரசு கழிவுத்தொட்டியோடு இணைத்துள்ளதாக பேசினாலும் இதனை எப்படி மறுசுழற்சி செய்கிறார்கள், சுற்றுலாப்பயணிகளுக்கு பிரச்னை ஏற்படாதா என்பது குறித்து குழப்பங்கள் நிலவுகின்றன.
அரசு சொல்லும் கணக்குக்கும், மக்களின் தேவைக்கும் நிறைய தூரம் உள்ளது. கும்பமேளாவுக்கு கூடும் மக்களின் கழிவுகள் பதினெட்டு சதவீதம் அதிகமாக இருக்கும் என அறிவியல் மற்றும் சூழல் நிறுவனம்(புது டில்லி) தெரிவிக்கிறது.
2015 ஆம் ஆண்டு வெளியான pubmed அறிக்கைப்படி பார்த்தால் கும்பமேளா விழாவில் தினசரி 15 ஆயிரம் டன்கள் மனிதக்கழிவுகள் தேங்கும் அபாயம் உள்ளது.
தினசரி உருவாகும் கழிவுநீரின் அளவு 254 மில்லியன் லிட்டர்கள். நிலத்தடி நீர்மட்டம், சூழல், மனிதர்களின் சுகாதாரம் என ஏகப்பட்ட கேள்விகள் இருக்கின்றன. இந்த நெருக்கடிகளை எப்படி சமாளிக்கப்போகிறது என்ற கேள்விக்கு தனது செயல்பாடுகள் மூலம் பதில்சொல்ல கடமைப்பட்டுள்ளது உ.பி அரசு.
நன்றி: downtoearth