பூச்சிகள் சிறுநீர் கழிக்குமா?
istock |
பூச்சிகள் சிறுநீர் கழிக்குமா?
இதற்கு பதில் இல்லை என்பதே. ஆனால் சில பூச்சிகள் இதுபோல செய்வதுண்டு. உணவுகளை செரித்து தனியாக பிரிக்க பெரும்பாலான பூச்சிகளுக்கு கிட்னிகள் கிடையாது. Malpighian tubules என்ற உறுப்பு மூலம் ரத்தத்திலுள்ள நைட்ரஜன் பொருட்களை உறிஞ்சி கழிவுகளில் வெளியேற்றும் தன்மை கொண்டவை பூச்சிகள்.
இதனால் பிற விலங்குகளைப் போல தனியாக சிறுநீர் மூலம் உடலின் அதிக கனிமங்களை, தாது உப்புக்களை வெளியேற்றும் அவசியம் பூச்சிகளுக்கு கிடையாது. Aphids, Cicadas ஆகியவை சிறுநீரை வெளியேற்றும் தன்மை கொண்ட பூச்சிகள்.