நெகிழ்ச்சியான டைலன் டாக் கதை - படிக்க மறக்காதீர்

Image result for dylan dog comics



டைலன் டாக் தேடும்

வாராதோ ஓர் விடியலே?



காமிக்ஸில் அனைவரும் எதிர்பார்ப்பது என்ன? அதிரடியான ஒரு கதை. திகட்ட திகட்ட காதல். சூப்பர் க்ளைமேக்ஸில் சுபமான முடிவு. ஆனால் இக்கதையில் வெகுஜன காமிக்ஸில் எந்த விஷயமும் கிடையாது. எனவே ஹீரோ அடிவாங்க கூடாது, பணத்திற்கு கஷ்டப்படக்கூடாது, புனிதமான வர்ஜின் பெண்ணை காதலிக்கவேண்டும், எப்பாடு பட்டாலும் நினைத்த ஒருவரை காப்பாற்றி விடவேண்டும் என நினைத்துக்கொண்டு கதையை படித்தால் ஏமாந்து போவீர்கள்.

ஜானி என்ற கால்கள் இல்லாத மாற்றுத்திறனாளிக்கு சாப்பாடு போடப்படுகிறது. அதனை சாப்பிடும்போதே திடீரென அறை தீப்பிடிக்க அதிலிருந்து காயங்களுடன் தப்புகிறான். நாய்களுடன் போராடி சாப்பிட்டு புதர்களின் கிடக்கிறான். டிடெக்டிவ் டைலன் டாக்கின் நாய் அவனைக் கண்டுபிடிக்கிறது.

பேசமுடியாத காது கேட்காத தன்மையில் இருக்கும் ஜானி யார், அவனை ஊனமாக்கியது எந்த கும்பல், அவனது பெற்றோர் எங்கே? ஆகிய கேள்விகளுக்கு விடைதேடும் பயணம்தான் வாராதோ ஓர் விடியலே?


இதில் டைலன் டாக்கின் ஏழ்மை அவரது பி.ஏ க்ரௌச்சோ மூலம் சொல்லப்படுகிறது. மற்றபடி ஹீரோ அதிரடிக்கிறார் என்பதோடு அடியும் வாங்குகிறார். பெரியளவு ஆக்ஷன் அதிரடிகள் கிடையாது. நாயகனும் கண்கலங்கி அழுவான், துயரப்படுவான் என கதை அமைத்தது பரிசோதனை முயற்சி என்றாலும் படிக்க சுவாரசியம் குன்றவில்லை.

ஜானியின் செயல்களின் மூலம் அவனது முந்தைய வாழ்க்கை தெரிய வருவது செம திரில் என்றால் , அவனது வாழ்க்கை தொடர வேண்டுமா என்பது போல ஏராளமான நெருக்கடிகள்.

டௌகால் அர்ஹாம் மூலம் வரும் சிக்கல்களை முடிச்சுப்போட்டு டைலன் இறுதிக் காட்சியை திட்டமிடுவது அட்டகாசம். நெருப்பு, விநோத விலங்குகள், கிளாரினெட் இசை, படங்கள் என வேறுபட்ட உலகிற்கு தயாராகி காமிக்ஸை படியுங்கள். இல்லையென்றால் என்ன கதை, என்ன படம் என துயரப்படுவது மட்டுமே மிஞ்சும்.


- கோமாளிமேடை டீம்

சென்னை புத்தகத்திருவிழா 2019, நந்தனம்