ஹோலோகிராம் மனைவி - வருகிறது டிஜிசெக்சுவல்ஸ் கலாசாரம்



Image result for digisexuals


ஜப்பானின் டோக்கியோவைச் சேர்ந்த அகிகோ கோண்டோ என்ற கல்வி நிறுவனப் பணியாளர், கல்யாணத்தில் புதுமையைச் செய்துள்ளார். கடந்த நவம்பரில் சுற்றும் சூழ நாற்பது பேர் ஒன்றுசேர்ந்து வாழ்த்த  ஹட்சுனே மிகு என்ற ஹோலோகிராம் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார்.

Image result for akihiko kondo
அகிகோ தன் ஹோலோகிராம் மனைவியுடன்

ஆனால் இது பப்ளிசிட்டி கல்யாணம் அல்ல. உண்மையிலேயே காதலியை விரும்பி திருமணம் செய்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவு என்பது ரோபோக்களில் மட்டுமல்ல கேமராக்கள், பொருட்கள் என அனைத்து இடங்களிலும் பரவி வருகிறது. அப்புறம் படுக்கை அறைக்கும் வருவதற்கு என்ன? ஜப்பான் டைம்ஸ் அகிகோவின் கதையை வெளியிட்டு தவறானது என தீர்ப்பு எழுதியுள்ளது. ஆனால் யாரோ ஒருவர் தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கை குறித்து தீர்ப்பு எழுதுவதை எப்படி ஏற்க முடியும்?

அகிகோ போல உலகில் யாருமே இல்லையா?

2016 ஆம் ஆண்டு பிரெஞ்சு பெண்மணி, ”தன்னால் ஆண்களோடு உறவு வைத்துக்கொள்ள முடியவில்லை. ரோபோக்களே பெஸ்ட். மனிதர்களில் ஆண்களுடன் காதலிக்க மட்டுமே என்னால் முடியும். செக்ஸ் வைத்துக்கொள்வது சாத்தியமில்லை ” என்று கூறியுள்ளார்.

இவர்களை டிஜி செக்ஸூவல் என்று குறிப்பிடுகின்றனர். எவ்வளவு தூரம் டிஜிட்டல் பொருட்கள் அதிகரித்துள்ளதோ அதேயளவு மனிதர்களுக்கு இடையே இடைவெளியும் அதிகரித்துள்ளது. இதனால்தான் மசாஜ் செய்யும் பெண் ஏஐ ரோபாட் லோரா டிகார்லோ,  செக்ஸ் ரோபாட்டான அபிஸ் கிரியேஷன்ஸ் ஆகியவை உருவாகியுள்ளன.

ரஷ்யாவில் ரோபோ பிராத்தலே நடைபெறத் தொடங்கிவிட்டது. முப்பது நிமிடங்களுக்கு  90 டாலர்களை கொடுத்தீர்கள் என்றால் ரோபாட்டுடன் செக்ஸ் வைத்து மஜா செய்யலாம். கேங் பேங் வசதிக்கு மூன்று ரோபாட்டுகளும் உண்டு. ஷாக் அடிக்காமல் பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு.

அடுத்த தலைமுறை விஆர் உலகத்தையே தரிசித்து வாழும். ரெடி பிளேயர் ஒன் போல நடைமுறை உலகம் வேறுவகையில் இருக்கும். இணைய வாழ்க்கைக்கும் நிஜ வாழ்க்கைகுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. நிலைமை செல்வது அப்படித்தான்.

நன்றி: நியூயார்க் டைம்ஸ், தி டைம்ஸ் ஆப் இந்தியா