ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் இனவெறி காரணமாக கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்! - லிண்டா வில்லாரோஸா









 


லிண்டா வில்லாரோசா

எழுத்தாளர்




பல ஆண்டுகளா கருப்பின மக்களின் உடல், மன ஆரோக்கியம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பெண்மணி. அண்மையில் அண்டர் தி ஸ்கின் - தி ஹைடன் டோல் ஆஃப் ரேசிசம் ஆன் அமெரிக்கன் லைவ்ஸ் அண்ட் ஆன் தி ஹெல்த் ஆஃப் அவர் நேஷன் என்ற நூலை எழுதியுள்ளார். 

இனவெறி என்பது கருப்பின மக்கள் கடந்த எப்படி நாட்டின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உருவாகியுள்ளது என நினைக்கிறீர்கள்?

அமெரிக்காவின் நிலையை நீங்கள் பிற நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்துத்தான் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளின் இறப்பு அதிகரிப்பதோடு, மக்களின் ஆயுளும் குறைந்து வருகிறது. கர்ப்பிணிகளின் இறப்பும் கூடி வருகிறது. இதனை பிற வளர்ந்த நாடுகளோடு ஒப்பிட்டுத்தான் கூறுகிறேன். இப்படி நடக்கும் சம்பவங்கள் அனைத்துமே கருப்பின மக்கள் மட்டும் சார்ந்தது கிடையாது. நாடு முழுக்க இந்த பிரச்னை உள்ளது. 

அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு உடல் மனரீதியான பிரச்னைகள் உள்ளன. அவர்கள் குழந்தை பெறுவதே சிக்கலானது என கூறுவது ஏன்?

பெருந்தொற்று காலத்தில் பிறரை விட அதாவது வெள்ளையரை விட பத்து வயது இளமையானவர்கள் கூட இறந்துபோனார்கள். கோவிட் காலத்தில் ஏராளமான கருப்பினத்தவர்கள் இறந்துபோய்விட்டார்கள். காரணம், மனதளவில் ஏற்கெனவே கருப்பினத்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததுதான் காரணம். 

அமெரிக்காவில் தொடர்ச்சியாக கருப்பினத்தவர்கள் வேலை காரணமாகவும் பொதுஇடங்களிலும் பல்வேறு அவமானங்களை, இகழ்ச்சிகளை சந்திக்கிறார்கள். இதனால் அவர்கள் எப்போதும் கடுமையான மன அழுத்த சூழலில்தான் வாழ்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் குழந்தை பெற்றால் அதற்கும் ஆபத்தான சூழல்தானே ஏற்படும்? மனம் மெல்ல பாதிக்கப்பட உடலும் நாளடையில் பாதிக்கப்பட்டு பலவீனமாகிறது. அர்லைன் ஜெரோனிமஸ் இதைப்பற்றி வெதரிங் என்ற வார்த்தையை கூறியிருக்கிறார். 

மேற்கு வர்ஜீனியாவில் நீங்கள் உடல்நலம் பற்றிய பாதிப்பை அறிய சென்றிருந்தீர்கள். கருப்பின மக்களின் ஆரோக்கியம் பற்றி அறியத்தான் அங்கு சென்றீர்களா?

2008ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற ஆய்வில், ஜெரோனிமஸ் பங்கேற்றார். இதில் குழந்தைகளின் எடை 24 சதவீதம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடும்போது நிலைமையின் தீவிரத்தை மக்கள் அறிந்தனர். மேற்கு வர்ஜீனியாவில் எய்ட்ஸ் நோய் தீவிரமாக இருந்தது. அதை சரி செய்கிறேன் என நிறைய மருந்து நிறுவனங்கள் ஓபியாய்டு மருந்துகளை எடுத்து சென்றன. இதன் விளைவாக அங்குள்ள மக்கள் அந்த மருந்துகளை அடிமையாகிவிட்டனர். மேலும் மக்கள் அவர்களின் நிஜ வயதை விட அதிக வயதானது போல மாறியிருந்ததை நான் அங்கு சென்றுதான் உணர்ந்தேன். 

நிறைய உண்மைகளைப் பற்றி அறிந்து எப்படி கருப்பின மனிதராக சமூகத்தில் வாழ்வது?

இந்த வாழ்க்கை உங்களை மேலிருந்து கீழே இழுக்கத்தான் முயல்கிறது. ஆனால் அதை நீங்கள அனுமதிக்க கூடாது. நான் இந்த விஷயத்தை தேவைப்படும் வரையில் செய்துகொண்டே இருப்பேன். இந்தப் பிரச்னைக்கு நெருக்கமாகவே எனது குடும்பம் இருக்கிறது. அவர்களில் யாருக்கு உடல்நலம் கெட்டாலும் அதை நாங்கள் உடனே சரி செய்துவிடுவோம். சமூகத்தில் இனவெறி இருக்கிறது என்பது உண்மை. ஆனால் நிஜத்தில் அதை யாரும் காதில் கேட்க விரும்பவில்லை. 

தி நேஷன் 

 https://www.lindavillarosa.com/





கருத்துகள்