இந்தி சினிமாக்களில் விலைமாதுக்களின் நிலை!

 










பாலியல் தொழிலாளிகளையும் மதிக்கவேண்டும். அவர்கள் செய்வதும் தொழில்தான். விலைமாதுக்களையும் கௌரவமாக நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கௌரவம் நிஜமாக கிடைக்குமோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் திரைப்படங்களில் விலைமாதுக்களை காட்டிய சினிமாக்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம். இது இந்தி சினிமாக்கள் மட்டுமே. 


















பேகம் ஜான் 

பீரியட் படம்தான். முகேஷ் பட் தயாரிக்க 2017இல் வெளியான படம். சுதந்திரத்திற்கு பிறகான விலைமாதுக்களின் நிலையைப் பேசிய படம் இது. வித்யாபாலன் தான் விலைமாதுக்களின் தலைவி. வங்காளப் படமான ராஜ்கஹினி என்ற படத்தின் இந்தி ரீமேக் இது. 

மண்டி 

1983ஆம் ஆண்டு ஷியாம் பெனகல் உருவாக்கிய படம்தான் மண்டி. படத்தில் ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா படேல், நஸ்ரூதின் ஷா ஆகியோர் நடித்திருந்தனர். இதன் மூலம் உருது சிறுகதை. ஆனந்தி என்ற சிறுகதையை எழுதியவர் குலாம் அப்பாஸ். விபச்சாரத்தை நடத்துபவராக தலைவியா ஷபனா ஆஸ்மி நடித்திருந்தார். இவரது கட்டுப்பாட்டில் உள்ளவருக்கு உருவாகும்  இன்னொரு உறவால் ஏற்படும் பாதிப்புகள்தான் கதை. காமம், உடல்ரீதியான மகிழ்ச்சி ஆகியவற்றைப் பற்றிய பேசிய வகையில் முக்கியமான படம். 1984ஆம் ஆண்டு மண்டி படத்திற்கு சிறந்த கலை வடிவமைப்புக்காக தேசிய விருது வழங்கப்பட்டது. 

சாந்தினி பார்

தபு, அதுல் குல்கர்னி ஆகியோர் நடித்த படம். விலைமாதுக்களைப் பற்றி உண்மையை உள்ளபடியே சொன்ன படம். விலைமாதுக்கள் தங்கள் பிள்ளைகளுக்காக உழைத்தாலும் கூட அவர்களும் இந்த விவகாரத்தில் இருளுக்குள் தள்ளப்படுவதை சொன்னது இந்தப்படம். படத்தில் தபு அவரது மாமாவால் வல்லுறவு செய்யப்பட்டு பாரில் டான்ஸராகிறார். பிறகு மாஃபியா கும்பல் தலைவனை மணந்து திருமண வாழ்க்கைக்கு செல்கிறார். திடீரென கணவன் கொல்லப்பட, தபுவின் மகளும் அம்மாவின் கடந்த கால வாழ்க்கை வழியாக பார் டான்ஸர் ஆவதே கதை. 

லாகா சுனாரி மெய்ன் தாக் - ஜர்னி ஆஃப் எ வுமன்

2007ஆம் ஆண்டு வெளியான படம். ராணி முகர்ஜி, கொங்கனாசென் , அபிஷேக் பச்சன், ஜெயா பச்சன், குணால் கபூர் ஆகியோர் நடித்த படம். குடும்பத்திற்காக மூத்தபெண் விபச்சாரத்தில் ஈடுபட்டு தனது சகோதரிகளை நல்ல நிலைக்கு கொண்டு வருகிறாள். இதுபற்றி அவளது குடும்பத்திற்கு தெரியாது. அம்மா மட்டுமே மகளைப் பற்றி அறிந்திருக்கிறாள். அவளும் குடும்பத்திற்கான ஒரே வருமான வாய்ப்பையும் இழக்க முடியாத நிலையில் மகளை ஏதும் சொல்லாமல் இருக்கிறாள். இளம் தங்கை அக்காவின் நிலையைக் கண்டுபிடித்து தன்னைப் பற்றியும் யோசிக்க தூண்டுகிறாள். இந்த நிலையில் அக்கா என்ன முடிவெடுத்தாள் என்பதே கதை. 

சலாம் பாம்பே 

மும்பையிலிலுள்ள சிவப்பு விளக்குப் பகுதியைப் பற்றிய பேசிய படம். படத்தை எழுதி தயாரித்தவர் மீரா நாயர். மும்பையில் உள்ள குடிசைப்பகுதி வாசி கிருஷ்ணா. தினசரி 500 ரூபாய் சம்பாதிக்காமல் வீட்டுக்கு வர முடியாத சூழல். தனக்கான வேலையை சிவப்பு விளக்கு பகுதியில் தேடிக்கொள்கிறான். அங்கு விபச்சாரத்திற்காக விற்கப்படும் சோலா சால் என பெண்ணின் மீது ஈர்ப்பு கொள்கிறான். பிறகு நடக்கும விஷயங்கள்தான் கதை. 

ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் 




கருத்துகள்