டாப் 1 அமெரிக்க சூப்பர் கம்ப்யூட்டர் ஃபிரான்டியர்!

 











உலகின் வேகமான சூப்பர் கம்ப்யூட்டர்! 

டாப் 500 சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில், அமெரிக்க சூப்பர் கம்ப்யூட்டர் புதிதாக இடம்பிடித்துள்ளது. இதன்  பெயர், ஃப்ரான்டியர்  எக்ஸாஸ்கலே கணினி  என அழைக்கின்றனர். 

எக்ஸாஸ்கலே கணினி ஒரு நொடிக்கு, குயின்டில்லியன் கணக்குகளை போடும் திறன் கொண்டது. நான்கு ஆண்டுகளுக்கு பூமியிலுள்ள அனைத்து மனிதர்களும் 24 மணிநேரமும் கணக்கு போடுவதை இக்கணினி ஒரு நொடியில் போட்டுவிடும். 

ஜப்பானில் உள்ள ஃபுகாகு என்ற சூப்பர் கணினியை ஃபிரான்டியர் கணினி பின்னுக்கு தள்ளியுள்ளது. கணினியின் வேகத்தை பெட்டாஃபிளாப்ஸ் என்று அழைக்கின்றனர்.  இந்த வகையில் ஃபுகாகுவின் வேகம் 442 பெடாஃபிளாப்ஸ்களாக உள்ளது.  ஃபிரான்டியர் , 1 எக்ஸாஸ்கேல் என்பது 1000 பெடாபிளாப்ஸ்க்கு ஒப்பானது. இந்த வகையில் எக்ஸாஸ்கேல், பட்டியலில் முதன்மையாக உள்ள நான்கு கணினிகளையும் தாண்டிய திறனைக் கொண்டுள்ளது. 

ஃபிரான்டியர் சூப்பர் கணினி 2023 ஆம் ஆண்டு வெளியாக உள்ளது. இதனை அமெரிக்க ஆற்றல் துறையில் தேசிய ஆய்வகத்தில் சோதித்து வருகிறார்கள். 

இப்போதைக்கு டாப் சூப்பர் கணினிகளைப் பார்ப்போமா

1 . ஃபிரான்டியர் 2. ஃபுகாகு, ஜப்பான் 3. லூமி, பின்லாந்து 4. சுமித், அமெரிக்கா, 5. சியர்ரா, அமெரிக்கா.

இந்தியா இந்த சூப்பர் கணினி போட்டியில் எங்கேயுள்ளது?

கண்ணில் கைவைத்து தேடினால்தான் உண்டு. பரம் சித்தி ஏஐ என்ற சூப்பர் கணினியை உருவாக்கியுள்ளது. இதன் பெடாபிளாப்ஸ் வேகம் 3.3 தான். 

அமெரிக்க ஃபிரான்டியர் சூப்பர் கணினியை உருவாக்கிய குழு தலைவர தாமஸ் ஜக்காரியா இந்தியாவின் கேரளத்தைச் சேர்ந்தவர். இந்த வகையில் நாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். 

இவர் 1957இல் அமெரிக்காவில் பிறந்தார். இயந்திரப் பொறியியல் படிப்பை தேசிய இன்ஸ்டிடியூட்டில் கற்றார். கல்வி கற்று பட்டம் பெற்ற ஆண்டு, 1980. 

சீனா இரண்டு சூப்பர் கணினிகளை உருவாக்கியுள்ளது. தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் சென்டர் , வுக்ஸியில் கணினிகளை உருவாக்கி சோதித்து வருவதாக கூறுகின்றனர். இவை ஃபிரான்டியரை விட வேகமானவை. 

ஃபிரான்டியரை உருவாக்க 600 மில்லியன் டாலர்கள் செலவாகியுள்ளது. இதில் ஏஎம்டி இபிஒய்சி 64சி 2 ஹெர்ட்ஸ்  புரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

ஃபிரான்டியரை உருவாக்க 9,400 சிபியூக்களை பயன்படுத்தியுள்ளனர்.

ஃபிரான்டியர் இதுவரை உருவாக்கப்பட்ட சூப்பர் கணினிகளில் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தி கணக்குகளை போடும் திறன் கொண்டதாக உள்ளது. ஒரு வாட்டிற்கு 52.23 ஜிகாபிளாப்ஸ்கள் என செயல்படுகிறது. 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்  


கருத்துகள்