இந்திய வரலாறு குறிப்பிட்ட நெறிமுறைப்படி எழுதப்பட்டது! - மிருதுளா முகர்ஜி, வரலாற்று ஆய்வாளர்

 






மிருதுளா முகர்ஜி, வரலாற்று ஆய்வாளர்




பேராசிரியர் மிருதுளா முகர்ஜி

வரலாற்று ஆய்வாளர் 


மிருதுளா 2012-2014 காலகட்டத்தில் ஜேஎன்யூ சமூக அறிவியல் துறையின் தலைவராக செயல்பட்டார்.  2006 -2011 காலகட்டத்தில் நேரு நினைவு அருங்காட்சியகத்தில் தலைவராக செயல்பட்டார். 


குறிப்பிட்ட முறையில் வரலாற்றை உருவாக்குகிறார்கள். அப்படியென்றால் இங்கு, தகவல்களை மறைக்கிறார்களா?

வரலாற்றை நேரடியாக எழுதுவது என்ற அதிகாரப்பூர்வ செயல்பாடு எங்குமே நடைபெற்றது இல்லை.வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அவர்களாகவே சுயமாக ஆய்வு செய்து எழுதுகிறார்கள். இந்த வகையில் முதல்தரமான ஆய்வாளர்கள் பாடநூல்களை எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். காலனி கால ஆட்சியின் சுவடுகளை தவிர்த்துவிட்டு வரலாற்றை எழுதுவது முக்கியம். 

பிரிவினையை ஏற்படுத்தாத உண்மையான கருத்துகள் என்றால் அவை ஏன் வன்முறையை ஏற்படுத்தும் இயல்பில் உள்ளன?

நீங்கள் கூறும் விதமாக எழுதப்படும் வரலாறு அரசியல் கொள்கைகளுக்கு ஏற்ப மாற்றப்படுவதுதான். இவை இயல்பான தேடுதலால் எழுதப்படுவதில்லை. 

வலது சாரி வரலாற்று ஆய்வாளர்களை வரலாறு ஆய்வுகளை செய்ய அனுமதிப்பது, நூல்களை அங்கீகரிக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுகின்றனவே?

இனக்குழு சார்ந்த கருத்தியல் கொள்ளாதவர்கள், வரலாறு சார்ந்து பாகுபாடு இல்லாமல் கருத்துகளை எழுத முடியும் என்ற நம்பிக்கை இதற்கு காரணம். இந்த கருத்துக்கு எதிரான கருத்துகளையும் ஆய்வாளர்கள் கொண்டிருந்தனர். 

வரலாற்றில் ஆக்கிரமிப்பாளர்களை நாம் சரியாக குறிப்பிடவில்லையா?  இதில் சரியாக கோணம் பதிவு செய்யப்படவில்லையா?

இல்லை. நான் இதை ஏற்கமாட்டேன். நீங்கள் கூறும் கருத்துகள் பல்லாண்டு காலமாக கூறப்பட்டு வருபவைதான். ஆங்கிலேயர்கள் இந்து, முஸ்லீம்களிடம் நாங்கள் சென்றபின் இந்த இனக்குழுவினர் தான் உங்களை ஆள்வார்கள் என மாற்றி மாற்றி சொல்லி பிரிவினையை ஏற்படுத்தியதுதான் உண்மை. 


அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு ஏற்றபடி வரலாற்றை மாற்றி எழுதிக்கொள்ளலாம் என்பதை ஏற்கிறீர்களா?

இந்தியாவில் எழுதப்பட்ட வரலாறு குறிப்பிட்ட நெறிமுறைப்படி ஒழுக்கத்துடன் உருவாக்கப்பட்டது. நீங்கள் கூறுவது போல உருவாக்கலாம் என்றால் உலகம் முழுக்க மாறுபட்ட வரலாற்று பதிவுகள் உருவாகியிருக்கும். நாம் குறிப்பிட்ட நெறிமுறையில் எழுதியதால்தான், வரலாற்றை பல்வேறு நாட்டவர்களும் மதிக்கிறார்கள். இர்பான் ஹபீப், ரோமிளா தாப்பர், பிபன் சந்திரா ஆகிய வரலாற்று ஆய்வாளர்கள் எழுதிய ஆய்வு நூல்களுக்கும் அவர்களுக்கும் இன்று உலகளவில் மரியாதை குறைந்து போய்விட்டதா என்ன? இருபதாண்டுகளாக அவர்களது நூல்களை கல்வித்துறை புறக்கணிக்கிறபோதும் அவை ஆயிரக்கணக்கில் விற்றுக்கொண்டுதானே இருக்கின்றன. 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 



கருத்துகள்