புத்தகம் புதுசு - புதினின் மனதில் என்ன இருக்கிறது?

 






ஆஃப்டர் ஸ்டீவ்

டிரிப் மிக்கில்

ஹார்ப்பர் கோலின்ஸ்

599

ஸ்டீவ் ஜாப்ஸ் இருந்தபோது ஆப்பிளின் மதிப்பே வேறு. புதிய கண்டுபிடிப்புகள் வந்தன. பழைய பொருட்கள் தூக்கியெறியப்பட்டன. ஆனால் இப்போது நிறுவனம் தனது ஆன்மாவை இழந்துவிட்டது. புதிய கண்டுபிடிப்புகள் ஏதும் இல்லை. பழைய பொருட்களையே அப்டேட் செய்து விற்று வருகிறார்கள். நூலை ஆசிரியர் 200 முன்னாள், இந்நாள் ஊழியர்களிடம் பேசி ஆப்பிள் எப்படி செயல்படுகிறது என அடையாளம் கண்டு எழுதி உள்ளார். 





புதின் 

பிலிப் ஷார்ட் 

பெங்குவின் ராண்டம் ஹவுஸ் 


புதிதின் புதிய ரஷ்யாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அது உக்ரைனை அழித்துக்கொண்டிருக்கிறது. 2000இல் ரஷ்ய அதிபராக பதவியில் உட்கார்ந்தார் புதின். பிறகுதான் சோவியத் ரஷ்யா கால அதிகாரத்தை கொண்டு வர நினைத்து பல்வேறு வேலைகளை செய்யத் தொடங்கினார். பனிப்போர், சைபர் போர், பிரிந்துசென்ற நாடுகளை மிரட்டி ரஷ்யாவுடன் இணைப்பது என புதினின் மனதில் மூளையில் என்னதான் உள்ளது என விளக்கமளிக்க முயல்கிறது இந்த நூல். 





தி மிஸ்ஸிங் கிரிப்டோகுயின்

ஜேமி பார்ட்லெட்

பெங்குவின் ராண்டம் ஹவுஸ்

இக்னாடோவா என்ற பெண்மணி மற்றிய கதை. இவர் ஹார்வர்டில் படித்தவர். ஒன் காயின் என்ற நிறுவனத்தைத் தொடங்கி பிட்காயினில் முதலீடு செய்ய மக்களை அழைத்தார். அவர்களை பணக்காரர்களாக்குவதாக வாக்களித்தார. இப்படி நடந்த ஊழலைப் பற்றியதுதான் இந்த நூல். 



தி மாரல் காம்பஸ்

ஹர்தயாள் சிங்

ஹார்பர் கோலின்ஸ் 

399

மனிதர்கள் குறிப்பிட்ட சூழலில் எதுமாதிரியான முடிவை எடுக்கிறார்கள் என்பதைப் பற்றி விளக்குகிற நூல் இது. பொதுவாக அறம் என்பதெல்லாம் இன்று கிடையாது. வசதியைப் பொறுத்து தனக்கேற்ப முடிவை மாற்றுபவர்களின் மனநிலை அது ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி நூல் பேசுகிறது. 

ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்