விஷம் கொண்ட தாவரங்கள்- விஷத்தை எப்படி பக்குவப்படுத்தி உண்பது?

 









விஷம் கொண்ட காய்கறிகள்

நாம் உண்ணும் நிறைய காய்கறிகள் விஷத்தன்மை கொண்டவைதான். அதாவது மனிதர்களின் செயல்பாடு இல்லாமலேயே இயற்கையாகவே தன்னை பாதுகாத்துக் கொள்ளும் விஷம் உண்டு. இவற்றை இன்றுவரை மனிதர்கள் விஷம் என்ன விட்டுவிடவிலை. அதை பதப்படுத்தி பக்குவப்படுத்தி மருந்துகள், உணவு, வாசனை திரவியங்கள் என பல்வேறு வகையில் பயன்படுத்தி வருகிறார்கள். இதைப்பற்றி பார்ப்போம்

வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடிகள் விஷத்தன்மை கொண்ட கொட்டைகளை சாப்பிட்டு வந்தனர். இரண்டு கொட்டைகளே ஒரு விலங்கை கொல்ல போதும். இப்படி விஷம் கொண்ட தாவர விதைகளை சைகாட்ஸ் என்று பெயர். இதிலுள்ள விஷம் சைகாசின் என அழைக்கப்படுகிறது. குடலில் சென்று செரிமானம் ஆகும்போது விஷம் வெளிப்பட்டு குடல் செல்களை தாக்குகிறது. பிறகு கல்லீரலையும் பாதிக்கிறது. குடல் எரிச்சல், கல்லீரல் செல்கள் இறப்பு, கல்லீரல் செயலிழப்பு ஆகியவற்றால் மனிதர்களுக்கு இறப்பு நேர்கிறது. பழங்குடிகள் இதை அறிந்துதான் விஷம் வாய்ந்த விதைகளை நீரில் அலசி நிலத்தில் துளையிட்டு அதை ஒரு வாரம் அல்லது சில மாதங்கள் வைத்திருந்து எடுத்து உலர்த்தி பிறகு உண்கிறார்கள். இந்த செயல்முறையில் தாவரத்திலுள்ள விஷம் நீங்கிவிடுகிறது.

எளிதாக ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். பாதாம் கொட்டைகளை சாப்பிட்டிருப்பீர்கள். அது பாக்கெட்டில் அடைக்கப்பட்டு உணவுத்தட்டிற்கு வருவதற்கு முன் பதப்படுத்தி அதிலுள்ள அமிக்டாலின் எனும் விஷத்தை நீக்குகிறார்கள். பிறகுதான் அதை நாம் சாப்பிட முடியும். அப்படியே சாப்பிடுவேன் இயற்கை நேயர்கள் ஆசைப்பட்டால் அமிக்டாலின் உடலுக்குள் சென்று சயனைட் எனும் விஷமாக பெருகும். இந்த வேதிப்பொருள் செல்களிலுள்ள ஆக்சிஜனை உள்ளிழுப்பதால், உடலிலுள்ள செல்கள் மெல்ல இறக்கும். ஐந்து பாதாம் கொட்டைகளை சாப்பிட்டால் உடலில் விறுவிறுவென விஷம் ஏறும். ஐம்பது என அரைசதம் அடித்தால், உறவுகளுக்கு சொல்லி அனுப்பிவிடலாம். அம்புட்டுத்தான்.

உருளைக்கிழங்கு

இன்று உருளைக்கிழங்கு சிப்ஸை தின்பதுதானே பல தின்பண்ட பிரியர்களுக்கும் அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. அதில் என்ன விஷம் இருக்கிறது என பார்ப்போம். கிழங்கு, செடியின் இலை, வேர் என அனைத்திலும் சோலனைன், சாக்கோனைன் என்ற விஷ வேதிப்பொருட்கள் உள்ளன. இவற்றை காக்கா கடி கடித்தால் கூட வாந்தி, பேதி, வயிற்றுவலி ஏற்படும். உருளைக்கிழங்கிலும் இந்த விஷம் உண்டு. ஆனால் வேக வைக்கும்போது அவை நீங்கிவிடுகின்றன.

செர்ரி பழங்கள்

பழங்களின் மத்தியில் விதை இருக்கிறதா, அவற்றில் தாவர விஷம் எப்போதும உண்டு. செர்ரி, பீச் ஆகிய பழங்களில் இதுபோல விஷம் இருக்கிறது. செர்ரியில் அமிக்டாலின் உள்ளது. விஷம், சயனைட். எனவே சாப்பிடும்போது கவனம். ஆப்பிளின் விதைகளிலும் சயனைட் குறைந்தளவு உண்டு.

சோயா பீன்ஸ்

இதிலுள்ள புரதம் லெக்டின், இதன் காரணமாக உள்ள தாவர விஷத்திற்கு பைட்டோ ஹேமக்குளூட்டின் என்று பெயர். சோயா பீன்ஸை அப்படியே ராவாக சாப்பிட்டால் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் வயிற்றுப்போக்கு ஏற்படும். நான்கைந்து மணிநேரத்திற்கு பிறகே அணையின் நீர்ப்போக்கு கட்டுப்படும். பீன்ஸை நன்கு ஊறவைத்து முப்பது நிமிடம் ஊறவைத்து உண்டால் விஷ பாதிப்பு நீங்கிவிடும்.

 

 


கருத்துகள்