பழங்குடி மாணவர்களுக்காக பள்ளிக்கட்டிடம் கட்டியவர் - கிரிதரன்
மரத்தின்
கீழே மாணவர்கள் படிப்பதைப் பார்த்தால் என்ன நினைப்பீர்கள். ரவீந்திரநாத்தின் சாந்தி
நிகேதனைப் போன்ற கல்விமுறையை இங்கேயும் பின்பற்றுகிறார்கள் என்றா? படித்தவர்கள், மாற்றுக்கல்வி
முறையை கற்றுத் தரும் ஆட்கள் அப்படி நினைக்கலாம். ஆனால் சாதாரணமான மக்கள் நினைப்பது,
பள்ளிக்கட்டிடம் எங்கே என்றுதான். அப்படித்தான் யதார்த்தமாக ஒரு கேள்வியை தனக்குள்
கேட்டுக்கொண்டார் வேலூரின் காட்பாடியைச் சேர்ந்த கிரிதரன்.
அந்த கேள்விக்கு
பதில் தே அவருக்கு மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஆம், கிரிதரன் பள்ளி மாணவர்களுக்காக
400 பேர்களிடம் நிதியுதவி பெற்று பள்ளிக்கட்டிடத்தைக் கட்டியிருக்கிறார். இன்னும் அதில்
டிவி பொருத்தும் விரிவாக்கத் திட்டம் இருக்கிறதாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது
39ஆம் வயதில் மருதவலியம்படி வந்து பார்த்தபிறகுதான் அவருக்கு பள்ளிக்கட்டிட யோசனை தோன்றியிருக்கிறது.
மரத்தடியில்
பாடம் கற்ற மாணவர்கள் பல்வேறு இயற்கைச்சூழல் பிரச்னைகளால் கல்வி கற்க முடியாத இடையூறுகள்
இருந்தன. காற்று வேகமாக அடித்தால் ஆசிரியர் சொல்லும் வார்த்தைகள் காதில் கேட்காது. முக்கியமாக இப்படி பாடம் கற்றுக்கொண்டிருந்த மாணவர்கள்
அனைவருமே பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். மருதவலியம்பட்டி என்ற அலெரி மலையின் மேலுள்ள
பழங்குடிகள்.
மரத்தடியில்
பாடம் சொல்லும் முயற்சியை சாத்தியப்படுத்திய தன்னார் தொண்டு நிறுவனம் செப்ஸ் புராஜெக்ட்
ஆகும். இந்த நிறுவனம், அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டப்படி பழங்குடி மாணவர்களுக்கு
பாடம் நடத்தி வந்தது. இப்போது புதிய பள்ளிக் கட்டிடம் வந்ததால் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின்
பணி இனி அங்குதான் தொடரப் போகிறது.
ஸ்யாம் சுந்தர்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
illutoon.com
கருத்துகள்
கருத்துரையிடுக