இரு கைகள் இல்லாமல் காலில் தேர்வு எழுதி ஆங்கில முதுநிலைப்பட்டம் வென்ற பெண்!

 










நெருங்கிய உறவில் திருமணம் செய்வது மருத்துவ அறிவியல் அடிப்படையில் குழந்தைகள் ஊனமாக முக்கிய காரணம் என அறிந்திருப்பீர்கள். ஆனால் கிராமங்களில் இன்றும் சொத்து, உறவு என ஏதோ காரணம் காட்டி பெண்ணை அவளது தாய்மாமனுக்கு திருமணம் செய்வது நடந்து வருகிறது. ஆர்காடு கிராமம் முகையூர் கிராமத்தில் வாழ்ந்த வீரம்மாளின் மகள் மாயாவுக்கும் இப்படித்தான் அவளது மாமாவுடன் திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை பிறந்தபோதுதான் திருமணத்தில் கோரமான விளைவு தெரிய வந்தது. பிறந்த குழந்தைக்கு இரண்டு கைகளும் இல்லை. குழந்தையைப் பார்க்க வந்த உறவினர்கள், குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என கூறியிருக்கிறார்கள். ஆனால் பேத்தியை வீரம்மாள் அப்படியெல்லாம் கைவிடவில்லை.

நான் உயிரோடு இருக்கும்வரை பேத்தி என்னோடு இருக்கட்டும் என நினைத்து குழந்தையை துணியில் பொதிந்து தூக்கி வந்துவிட்டார். இப்படி குழந்தை ஊனமாக பிறப்பதற்கு காரணம், உறவுமுறை திருமணம் என உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் கூறியிருக்கிறார்.

இப்படித்தான் வளர்ந்த பெண் குழந்தை வித்யா ஶ்ரீ இன்று ஆங்கிலப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவராக, அரசு ஆசிரியையாக முயன்று வருகிறார். தொடக்கத்தில் இவரை பள்ளியில் சேர, வீரம்மாள் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். இரு கைகளும் இல்லாத காரணத்தால் எப்படி எழுதுவாள் என ஆசிரியர்களை வித்யா ஶ்ரீயை படிக்க அனுமதி மறுத்துள்ளனர். பிறகுதான், வீரம்மாள் தனது பேத்தியை வகுப்பறையில் அமர அனுமதித்தால் போதும் என்று பேசி அனுமதித்துள்ளார். வித்யா ஶ்ரீ , இரு கைகள் இல்லாத நிலையில் கால்களால் எழுத, தனக்கான செயல்களைச் செய்துகொள்ள தொடங்கியிருக்கிறார். பள்ளி, கல்லூரியில் தேர்வு எழுதக்கூட  தனது கால்களைப் பயன்படுத்தியுள்ளார்.

ஊரில் உள்ள மாணவிகளுக்கு ட்யூசன் எடுத்து சம்பாதிப்பவர் அந்த பணத்தை வைத்து அரசு தேர்வுக்கு படித்து வருகிறார். கூடவே, வாழ்ந்து காட்டுவோம் எனும் மாநில அரசின் திட்டத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார்.  

             பகலவன் பெரியர் பி – தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்