தந்தையின் அன்பைப் பெற முயலும் துரதிர்ஷ்டமான மகனின் காமெடி வாழ்க்கை! லக்குன்னாடு - விஷ்ணு மஞ்சு, ஹன்சிகா

 

லக்குன்னாடு
விஷ்ணு மஞ்சு, ஹன்சிகா மோத்வானி
தெலுங்கு


அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் பற்றிய கதைதான் படம். சிறுவயதில் ஜெயப்பிரகாஷூக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை பிறந்த நேரம் நல்ல செய்தி வந்தாலும் அதற்கடுத்த சில மணி நேரங்களிலேயே அதை விட மோசமான செய்தி ஒன்றை கேட்கும்படி சூழல் உருவாகிறது. பொதுவாகவே மனிதர்கள் சூழலைப் பொறுத்து கருத்துகளை மனதில் பதித்துக்கொள்பவர்கள்தானே,

ஜெயப்பிரகாஷூம் தன் பையன் தனக்கு மோசமான சூழ்நிலையை உருவாக்கிவிட்டான் என நம்பத் தொடங்குகிறார். இதன் விளைவாக லக்கி என்று தான் சூட்டிய பெயரைக் கூட வாய் வழியாக சொல்லி கூப்பிடுவதில்லை என முடிவெடுக்கிறார். அம்மா, தங்கை பிரியமாக நடத்தினாலும் அப்பாவிடம் எந்த பாசமும் கிடைப்பதில்லை. வெறுப்பு லக்கியை சங்கடப்படுத்த அவன் நகருக்கு வருகிறான். பெரிதாக படிக்கவில்லை என்பதால் குறைந்தபட்சம் ஏதேனும் நிறுவனத்திற்கு சென்றால் தனது வாழ்க்கை விடியும் என நம்புகிறான். ஆனால் அதுவும் சொதப்ப தற்கொலை செய்யும் முடிவை எடுக்கிறான். ஆனால் அவனது குணத்திற்கான பரிசு போல திருடன் ஒருவன் ஏடிஎம் பணம் ஒன்றைத் திருடி லக்கியிடம் ஒப்படைக்கிறான். அதேநேரம் லக்கி சொந்த வாழ்க்கை துயரங்களால்  தம்ஸ்அப்பில் தூக்க மாத்திரைகளை போட்டு கலக்கி வைத்து குடித்து தற்கொலை செய்துகொள்ள நினைக்கிறான். அதை எடுத்து திருடன் குடித்துவிட்டு நாளைக்கு வந்து வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். நாளைக்கு வருவது எங்கே, எமலோகத்திற்கா என்ன…. அதேதான்.

 லக்கே இல்லாதவன், அதைப் பார்க்காதவனான லக்கிக்கு இந்த பணம் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்ததா, அல்லது துரதிர்ஷ்டத்தை உருவாக்கியதா என்பதே படத்தின் இறுதிக் காட்சி. படத்தில் காமெடி மட்டுமே சற்று ஆறுதல். அதுவும் வெண்ணிலா கிஷோர், பிரபாஸ் சீனு, லக்கியால் துரதிர்ஷ்டவசமாக அனைத்தும் இழந்து நடுத்தெருவுக்கு வந்து நைன் ரூப்பீஸ் கொடுங்க சார் தண்ணி அடிக்க தேவை என அலையும் நண்பர் ஆகியோர்களால் படம் சற்றுநேரம் பொறுத்துக்கொள்ளும்படி இருக்கிறது.

மற்றபடி வில்லனின் நடிப்பைப் பற்றி சொல்ல ஏதுமில்லை. வருகிறார், நீளமுடியுடன் நாடகத்தனமாக வசனத்தை சொல்கிறார். பிறகு நடந்து சென்று காரில் ஏறி சென்றுவிடுகிறார்.

விஷ்ணு மஞ்சுவைப் பொறுத்தவரை நடனம் என்பதை சமாளித்து விடுகிறார். ஆனால் சண்டை என்று வரும்போது மெதுவாக உடலின் இயக்கங்கள் மாறிவிடுகிறது. அதை பார்ப்பது சங்கடமாக மாறிவிடுகிறது. படத்தில் அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் என்பதை முக்கியமாக பேசுபவர்கள், லக்கி தன் வாழ்க்கை உருப்பட என்ன செய்கிறார் என்பதை சொல்லவில்லை. சிறுவயதிலிருந்து தன்னை வெறுக்கும் அப்பாவை கவர பல்வேறு முயற்சிகளை செய்கிறார். அவை எல்லாமே தவறுகளாக போய் முடிகிறது. மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த உறவாகவே ஜெயப்பிரகாஷ் லக்கி ஆகியோரின் உறவு இருக்கிறது. இதில் அவர் தனது மகனை இறுதியாக ஏற்பதைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அதனால் லக்கி இழந்த சிறுவயது திரும்பி வருமா என்ன, அனைத்தும் முடிந்துபோய்விட்டது. நமக்கும் லக்குன்னாடு படம் முடிந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது. அதேபோல படமும் முடிந்துவிட்டது. பிறகு என்ன அவ்வளவுதான்…..

நமக்கு விஷ்ணு அண்ணாவின் உருப்படியான படத்தைப் பார்க்க வாய்ப்பு இல்லை.

துரதிர்ஷ்டம்

கோமாளிமேடை டீம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை