இங்கிலாந்தில் அமைந்துள்ள புதிரான கல்தூண்கள் - ஸ்டோன்ஹென்ச்

 









ஸ்டோன்ஹென்ச்

அமைந்துள்ள இடம் வில்ட்ஷையர், இங்கிலாந்து

சிறப்பு கலாசார இடம்

நிலவுக்கே சென்றாலும் தேயாத செருப்பெல்லாம் வேண்டாம். கொஞ்சம் நல்ல பிராண்ட் செருப்பை வாங்கிப் போட்டுக்கொண்டு செல்லுங்கள். மழை பெய்தால் வழுக்கிவிடும் ஜாக்கிரதை.

பார்க்க தமிழ்நாட்டின் கிராமங்களில் அமைந்துள்ள சுமைதாங்கிக் கற்கள் போலவே இருக்கும். சுமைதாங்கி கற்களை யார் அமைத்தார்கள் என்பது ஊர்காரர்களுக்குத் தெரியும். ஏனெனில் கர்ப்பிணியாக இருந்து குழந்தை பெறும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக இறக்கும் பெண்ணின் நினைவுக்காக சுமைதாங்கிக் கற்கள் அமைக்கப்பட்டன.

இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன்ஹென்ச் என்னும் இவ்வகை கற்கள் யாரால், எதற்காக அமைக்கப்பட்டன என்று தெரியாது. கேள்விகளுக்கு பதில் தெரியாது என்று நிறைய இருந்தாலும் கூட இந்த கல் தூண்களுக்கு பெருமைக்கு குறைவில்லை.

புதிரான கல் தூண்கள் அமைக்கப்பட்ட காலம் 3,500 ஆக இருக்கலாம். ஆண்டுதோறும் இதை பார்க்கவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இதில் உள்ள சில கற்களுக்கு பெயர்கள் கூட வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து கற்களின் பெயர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆல்டர், சினிஸ்டர்லி, சேக்ரிஃபைஸ் இதுதான் அந்த பெயர்கள்.

 

கற்களில் வாள், கோடாரி ஆகியவை வரையப்பட்டிருந்தாலும் அதன் பயன் என்னவென்று ஆய்வாளர்களுக்கு தெரியவில்லை. கல் தூண்களை நீங்கள் 360 டிகிரி கோணத்தில் பார்க்கமுடியும். இவற்றைப் பார்க்கச் செல்ல நினைத்துள்ளீர்களா, அப்படியென்றால் பனி, கோடைக்காலம் ஆகியவை சரியான மாதங்களாக இருக்கும். கோடைக்காலத்தில் நீளமான நாள் ஒன்றுண்டு. அதில் சூரியன் உதயமாவை கற்களின் அருகில் நின்று பார்ப்பது பிரமாதமாக இருக்கும். அடுத்து பனிக்ககாலத்தில் வெளிச்சம் குறைந்த நாள் ஒன்று. அதிலும் நீங்கள் கற்களில் அருகில் இருந்தால் விசேஷம். அங்கு நீங்கள் மட்டும் இருக்க மாட்டீர்கள். ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உங்களுடன் இருப்பார்கள்.  கற்கள் வைக்கப்பட்டுள்ள பாணி சூரியனின் கதிர்களை வரவேற்கும் வாசல் போன்றது. அதில் படும் ஒளிக்கதிர்களை நீங்கள் பார்ப்பதுதான் சிறப்பானது.

 

ஸ்டோன்ஹென்ச் கண்காட்சியையும் நீங்கள் பார்க்கலாம். 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள். அவர்களின் வீடுகள், பயன்படுத்திய பொருட்கள் என அகழாய்வு வல்லுநர்கள் சேகரித்த பொருட்களின் சேகரிப்பு. பார்க்கக வசீகரமானது. எனக்கு இதுமட்டும் போதாது என நினைக்கிறீர்களா? அப்படியென்றால் ஆவ்பரி கலாசார தொன்மை இடத்தையும் கூடுதலாக சென்று பார்க்கலாம். நீங்கள் இந்த இடத்திற்கு நடந்து செல்லலாம். அல்லது பஸ் இருக்கிறது அதைப்பிடித்தும் போகலாம்.

 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்