யோகாவை கண்காணிக்கிறது இஸ்ரோ!
யோகா கண்காணிப்பு!
அண்மையில் யோகா
தினத்திற்கு ஆயுஷ் அமைச்சகத்திடமிருந்து இஸ்ரோ நிறுவனத்துக்கு புதுமையான கோரிக்கை
வந்திருக்கிறது.
என்ன அது?
வரும் ஜூன் 21 ஆம்
தேதி நடைபெறவிருக்கும் யோகா தினத்தை சிறப்பிக்கும் கோரிக்கைதான். உலக யோகா தினத்தன்று நாடெங்கும் யோகாவில் ஈடுபடுபவர்களை இஸ்ரோ சாட்டிலைட் மூலம்
கண்காணிக்கவேண்டும் என்பதுதான் அந்த புத்தம் புது கோரிக்கை. "நாங்கள் இஸ்ரோ தலைவருக்கு எழுத்துவடிவில் கோரிக்கையை அனுப்பியுள்ளோம். இஸ்ரோ உதவினால் யோகா தினத்தின் காலை 7 டூ 8
மணிவரை இதில் நாடு முழுவதும் பங்கேற்கும் அன்பர்களை அனைவரும் பார்க்கமுடியும்.
இஸ்ரோ இன்னும் அதற்கான ஒப்புதலை இன்னும் வழங்கவில்லை" என தகவல் தருகிறார் ஆயுஷ் அமைச்சக செயலரான ராஜேஷ் கோடெச்சா. டேராடூனின் வனத்துறை ஆராய்ச்சிக்கழகத்தில்
பிரதமர் மோடி பங்கேற்று யோகாசனங்களை செய்யவிருக்கிறார். யோகா
தினத்திற்கான பிரசாரங்களை ஆயுஷ் அமைச்சகம் சமூக வலைதளங்கள் வழியாக செய்யத்தொடங்கியிருக்கிறது.