பிட்ஸ் 2 -ஏடிஎம்மில் கை மாட்டிக்கிச்சு!



Image result for killbill pandey



பசு இடிச்சிடுச்சு!

சாலையில் விர் வேகத்தில் போகும்போது செம்மறி ஆடு, எருமை, பசு ஆகியவை சாலையில் மேய்ச்சலுக்கு அலைபாயும். சுதாரித்து கவனமாக வேகம் குறைத்து போகவில்லையெனில் மாவுக்கட்டுக்கு ஸ்பெஷல் ஆஸ்பத்திரி லிஸ்ட்டை இணையத்தில் தேடும்படி ஆகிவிடும். இங்கு ஒருவர் போலீசில் புகாரே கொடுத்துவிட்டார்.


யார் மீது புகார்? விபத்துக்கு காரணமான பசு மீதுதான். டெல்லியைச் சேர்ந்த பிஸினஸ் புள்ளி, ஸ்கூட்டியில் பாய்ந்து சென்றுகொண்டிருந்தபோது, தேமேயென்று குறுக்கே வந்த பசுவின் பாடி மீது மோதி ஸ்கூட்டர் சிதைந்தது. அதோடு விண்ணில் பயணித்த வணிகப்புள்ளிக்கு கால் எலும்பு ஃபிராக்சரானது. அந்நிலையிலும் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு பசு மீது கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டு ஆஸ்பிடல் சென்றுள்ளார். எந்த பசு விபத்துக்கு காரணம் என பசுக்கூட்டங்களில் ஆக்சிடன்ட் பசுவை வலைவீசித் தேடிவரும் போலீஸ், சிசிடிவியையும் ஆராய்ந்து வருகின்றனராம்.


2



அநீதிக்கு எதிரான குரல்!

ஹரியானாவைச் சேர்ந்த நேகா ஜாங்ரா, இரவு நேரம் ஷேர் ஆட்டோவில் பயணித்தார். அவருடன் பயணித்த ட்ராஃபிக் போலீஸ் திடீரென நேகாவிடம் அத்துமீற, என்ன செய்தார் நேகா?

போலீஸ்காரரை ஸ்பாட்டிலேயே புரட்டி எடுத்துவிட்டார். கடந்தாண்டு தேசியளவிலான கராத்தே போட்டியில் தங்க மெடல் ஜெயித்தவர் நேகா.  கராத்தே அகாடமியில் பயிற்சி முடித்து இரவு ஏழுமணிக்கு வீட்டுக்கு கிளம்பும்போதுதான் மேற்படி சம்பவம் நிகழ்ந்தது. ஆட்டோவில் ட்ராஃபிக் கான்ஸ்டபிள் யாசின், நேகாவும் மட்டுமே பயணித்தனர். முதலில் பெயர், பின் போன் நம்பர் கேட்டு டார்ச்சர் செய்தவரை அடித்து துவைத்த நேகா, பெண்கள் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். ஆனால் அங்குள்ள பெண் போலீசார் புகார் வேண்டாம் என கட்டப்பஞ்சாயத்து செய்யத்தொடங்க விஷயம் எஸ்பி பங்கஜ் நைனின் காதுக்குப்போக ஸ்பாட்டிலேயே யாசினுக்கு சஸ்பென்சன் கிடைத்ததோடு உடனே கைதும் செய்யப்பட்டுள்ளார்.


3

மொபைலை விழுங்கினால் கல்யாணம்!

கல்யாண ஆசைக்காக ஒருவர் எந்த எல்லைக்கும் போவார் என்பதற்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அஜய் திவிவேதியை நிச்சயம் அடையாளம் காட்டலாம்.

கல்யாணம் ஆகி ஸ்மார்ட் ரேஷன்கார்டு வாங்கும் ஆசையில் புரோக்கரைப் பார்க்கமால் தாந்திரிகத்தை நாடினார் அஜய். தாந்திரீகர் சிம்பிளாக மாத்திரை போல விழுங்கு என்று சொன்னதையெல்லாம் அவர் சொல்லி முடிக்கும் முன்னரே விழுங்கினார். போன், பேட்டரி, கத்தி, வயர் என இன்னபிற பொருட்கள்.  வயிற்றில் சேர்ந்த பொருட்கள் மெல்ல குடைச்சல் கொடுக்க, வயிற்றுவலி தொடங்க மருத்துவமனைக்கு ஓடினார் அஜய். அஜய்யின் எக்ஸ்‌ரேவைப் பார்த்த மெர்சலான டாக்டர் உடனே ஆபரேஷன் செய்து அஜய்யின் உயிரை காப்பாற்றியிருக்கிறார். கல்யாணமாலை உ.பியில் இல்லையா?
4


கை மாட்டிக்கிச்சு

ஸ்கெட்ச் போட்டு திருடினாலும் சிலசமயம் சொதப்பி வைக்கும்தான். டெல்லியில் திருடரின் கையும் அப்படித்தான் திருடிய இடத்திலேயே மாட்டிக்கொண்டு காமெடியானது.  

டெல்லியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் நசீர் () பாபு விஸ்வாஸ் நகரிலுள்ள பூட்டிய ஏடிஎம்மிலுள்ள பணத்தை அமுக்க பிளான் செய்தார். சக்சஸாக  பணத்தை வெளியே எடுத்த நிலையில் வங்கி அலர்ட்டாகி ஏடிஎம் திருட்டை போலீசிடம் புட்டுவைக்க ஸ்பாட்டில் உடனே போலீஸ் ஆஜர். ஷட்டரை போலீஸ ்திறக்க முயற்சித்தபோது பதட்டத்தில் நசீரின் வலதுகை ஏடிஎம்மில் சிக்கிக்கொள்ள கிராண்ட் அபேஸ் லீலை பரிதாப கிளைமேக்ஸை எட்டியது. 3 லட்சம் முதல் 30 லட்சம் வரையிலான ஏடிஎம் திருட்டு வழக்குகளில் நசீருக்கு தொடர்பிருக்கிறதா என போலீஸ் என்கொயரி செய்துவருகிறது. ஒத்தையிலே சிக்குனவனை இனி மொத்தமாக வெளுப்பாங்களே போலீஸ்!




பிரபலமான இடுகைகள்