வீக்எண்ட் பிட்ஸ்! -தில்லாக ஒரு திருட்டு!
பிட்ஸ்!
டர்பன் போலீஸ்!
நியூயார்க் போலீஸ்துறையில்
முதன்முதலாக குர்சோச்கவுர் என்ற டர்பன் அணிந்த சீக்கியப்பெண்ணை போலீஸ் அதிகாரியாக ஏற்றிருக்கிறார்கள். உற்சாகத்தில்
துள்ளிக்குதித்த சீக்கியசங்க நெட்டிசன்கள் இதனை இணையத்தில் வைரலாக்கினர். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஹர்தீப்சிங் பூரி ட்விட்டரில் குர்சோச்கவுருக்கு
கங்கிராட்ஸ் சொல்லியுள்ளார்.
விடாது ஹோம்வொர்க்!
சீனாவிலுள்ள ஷாங்க்யூ
நகரில் நடந்த ஹோம்வொர்க் சம்பவம்தான் அங்கு வைரல் பரபரப்பு. பள்ளியில்
கொடுத்த ஹோம்வொர்க்கை மாணவி ஓடும் காரின் கூரையில் வைத்து செய்யும் வீடியோ மாணவியின்
தந்தை உட்பட பலரையும் பீதிக்குள்ளாக்கியுள்ளது. ஹோம்வொர்க் செய்யும்
மாணவியுடன் காரினுள்ளே இருந்தபடி பேச்சு கொடுத்த மாணவியை பலரும் கவனிக்காததுதான் இதில்
விசேஷம்.
பூவா? தலையா?
மீட்டிங்!
கிரிக்கெட் மேட்சில்
காசை சுண்டி போடும் வழக்கம் கைவிடலாமா என ஒப்பீனியன் கேட்க ஐசிசி முடிவு செய்துள்ளது. போட்டி
நடத்தும் நாட்டிற்கு ஆதரவாக டாஸ் முடிவுகள் அமைவதால் போட்டி குறிப்பிட்ட அணிக்கு சார்பாக
அமைந்துவிடுகிறது என குவியும் புகார்களால்தான் இம்முடிவு. விரைவில் பூவா, தலையா போட்டுப்பார்க்க
மும்பையில் மீட்டிங் நடைபெறவிருக்கிறது.
தில்லாக ஒரு திருட்டு!
சீனாவின் டாங்குவான்
நகரில் நகைக்கடையில் நாசூக்காக புகுந்த திருடர் 46 லட்சரூபாய் நகைகளை ஆட்டையைப்
போட்டார். சிசிடிவி கேமராவை லட்சியமே செய்யாத விநோத திருடர் முகத்திற்கு
மாஸ்க் கூட போடவில்லை. தில்லாக திருடிவிட்டு ஷட்டரை மேலேற்றி
பொருட்களுடன் எஸ்கேப்பாகும் வீடியோ இணையத்தை அதிர வைத்துள்ளது.