செலிபிரிட்டி பாதுகாவலர்கள்!

Image result for celebrity security

செக்யூரிட்டி பிட்ஸ்!

பிஸினஸ், சினிமா, அரசியல்வாதி என பலருக்கும் பளபள ட்ரெஸ்ஸில் பக்காவாக பாதுகாப்பு தருவது பிரைவேட் பாதுகாவலர்களின் வேலை.

செக்யூரிட்டி என்பவர் பொசுக்கென இருப்பது இந்தியாவுக்கு ஒத்துவராது. எனவே ஒல்லி உடம்பிலும் அய்யனார் மீசை வைத்திருப்பார்கள். சுமோ வீரர்போல பாடி இருப்பது ஒகேதான். ஆனால் காரில் இடம் பத்தாதே!

"பாதுகாப்பில் துப்பாக்கியை ஜேம்ஸ்பாண்ட் போல உடனே தூக்குவது சரியான அணுகுமுறை அல்ல" என்கிறார் குளோபல் செக்யூரிட்டி குரூப் தலைவரான கென்ட் மோயர்.

பிரபலங்களின் பாதுகாப்புக்காக வீடு, ஆபீஸ், தனி விமானம் என அலைந்தாலும் எதையும் அனுபவிக்கும் மனநிலையில் பாதுகாவலர்கள் இருக்கமுடியாது. ஏனென்றால் பிரபலங்களை பாதுகாப்பது அவர்களது தினசரி வேலை.

பிரபலங்களை பிறர் செல்ஃபி எடுக்கலாம். ஆனால் பாதுகாவலர்கள் அவர்களுடன் போட்டோ எடுத்தால் அதோடு வேலை காலி. எனவே இவ்விஷயத்தில் உலகமெங்கும் மிக கவனமாக பாதுகாவலர்கள் இருப்பார்கள். மேலும் பாடி கார்டு என்ற சொல்லை விட பாதுகாப்பு ஏஜெண்ட் என்ற சொல்லையே பாதுகாவலர்கள் பலரும் விரும்புகின்றனர்.  





பிரபலமான இடுகைகள்