பிரியாணிக்காக ஒரு கொலை!
கடனைக்கேட்டால்
நாக்கை வெட்டு!
உ.பியிலுள்ள
அம்ரோகா பகுதியைச் சேர்ந்த பிரஜாபால், தான் கொடுத்த கடனைத் திருப்பி
கேட்டு நாக்கை இழந்துள்ளார்.
உ.பியைச்
சேர்ந்த பிரஜாபால் கொடுத்த கடனை வட்டியும் முதலுமாக வாங்க சத்தர்சிங் வீட்டுக்கு சென்றார்.
கடனைத் தரமறுத்த சத்தர்சிங் தன் உறவினர்களோடு கூட்டணிபோட்டு பிரஜாபாலின்
கத்தியால் அறுத்து எறிந்ததுதான் கொடூரத்தின் உச்சகட்டம். இதுதொடர்பாக
கொடுத்த புகாரின் மீது போலீஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிரஜாபால் குடும்பம்
கண்ணீர் வடிக்கிறது. 'நினைவிழந்து கிடந்த சத்தர்சிங்கை நாங்கள்தான்
மருத்துவமனையில் சேர்த்தோம். அவரை தாக்கிய பிரஜாபால் மீது புகார்
பதிவு செய்துள்ளோம்" ரிவர்ஸ் கியரில் பேசியது போலீஸ்தரப்பு.
பின்னர் நாக்கை இழந்தது கடன் கொடுத்த பிரஜாபால் என்பதை லேட்டாக புரிந்துகொண்டு
எஸ்கேப்பான சத்தர்சிங்கின் உறவினர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
2
பிரியாணி விலை, பகீர்
கொலை!
கண்கள் சிவக்க
பொசுக்கென கோபம் பொத்துக்கொண்டு வருவது எவ்வளவு பெரிய விபரீதங்களை மனிதர்களுக்கு ஏற்படுத்தும்
என்பது மேற்கு வங்காளத்தின் பிரியாணி கதையை கேட்டால் உங்களுக்கே புரியும்.
மேற்கு வங்காளத்தின் 24 பாரக்னாஸ்
மாவட்டத்தில் பிரியாணி கடை நடத்திவந்தார் சஞ்சய் மோன்டல். கடையில்
பரபரப்பான இரவு வியாபாரத்தின்போது முகமது ஃபெரோஸ் உட்பட நான்குபேர் வந்து விலை கேட்காமல்
நான்கு பிளேட் பிரியாணி தின்றனர். பிளேட் விலை தலா ரூ.190
என பில் வந்தவுடன் ஷாக் ஆனவர்கள், ஓனர் சஞ்சயுடன்
வாக்குவாதம் செய்யத் தொடங்கினர். உச்சகட்ட வாக்குவாதத்தில் கூட்டத்தில்
ஒருவரான முகமது ஃபெரோஸ், சட்டென துப்பாக்கி எடுத்து சஞ்சயின்
நெஞ்சில் சுட்டுவிட்டார். நொடியில் எஸ்கேப்பான கேங்கில் பிடிபட்டது
கொலையாளி முகமது ஃபெரோஸ் மட்டுமே. "ஃபெரோஸூடன் வந்த ராஜா,
மோக்ரி, சல்மான் ஆகியோர் குண்டர்கள். இனி எப்படி கடையை நடத்தப்போகிறோமோ?" என பதறுகிறார்
சஞ்சயின் சகோதரர். பிரியாணி காசிற்காக கொலை என்பதை நம்பாத போலீஸ்
வேறு மோடிவ் உள்ளதா என விசாரித்து வருகிறது.