பார்ட்டியில் குட்பை சொல்லாதவர்கள் பிரெஞ்ச் இடியட்!
பிட்ஸ்!
இங்கிலாந்தில் பார்ட்டியில் கலந்துகொண்ட ஒருவர் குட்பை சொல்லாமல் கிளம்பினால் அதற்கு
French leave என்று
பெயர்.
ஆபிரகாம் லிங்கன் தன் வெள்ளை மாளிகையில் பிரியமுடன் வளர்த்து வந்த இரு பூனைகளின் பெயர் டாபி, டிக்ஸி.
நாஜிக்களின் காலத்தில் பெண்கள் தினத்திற்கு தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதிக குழந்தைகளைப் பெற்ற தாய்களுக்கு தங்கம்,வெள்ளி, வெண்கல மெடல்கள் வழங்கப்பட்டன.
விக்டோரியா அரசி காலத்தில் தயாரிக்கப்பட்ட பாத்டப்புகள், அரைவட்ட நிலா வடிவில் நிரப்பிய நீர் முன்னும் பின்னும் செல்லும்படி அமைத்தனர்.
இதன்மூலம் கடலில் குளித்த அனுபவம் கிடைக்குமாம்.
அரசியல்
மற்றும் பொதுமக்களோடு ஒன்று கலக்காதவர்களைக் குறிப்பிட க்ரீக் நாட்டில் இடியட்(Idiot)
என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர்.
நவீன
சேர்களின் தந்தை சார்லஸ் டார்வின்.
இவரே சேர்களை நகர்த்த உருளைகளை கீழ்ப்பகுதியில் உருவாக்கி பொருத்தினார்.