கென்யா இளைஞர்களுக்கான ஒளி!
கென்யா இளைஞர்களுக்கான
ஒளி!
ஆட்ரே செங் 2014 ஆம்
ஆண்டு கென்யாவுக்கு வந்து மொரிங்கா எனும் கணினி பள்ளியைத் தொடங்கினார். மூன்றாண்டுகளில் 600 மாணவர்களை தயாராக்கி,
95% வேலைவாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளார். கென்யர்களில்
ஐந்தில் ஒருவருக்கு வேலையில்லாத நிலையில் இதனை செங் சாதித்துள்ளதுதான் நாம் கவனிக்கவேண்டியது.
"வேலைவாய்ப்புக்கு தொடர்பற்ற கல்வியை பலரும் கற்கிறோம்.
நாம் மாறவேண்டிய நேரமிது" என்கிறார் செங்.
நிதிநிறுவன பணிக்கு கென்யா வந்தவர், அங்கு திறமையானவர்கள்
இல்லாததால் கோடிங் வேலைகளை இந்தியாவுக்கு அளித்ததை அறிந்து இவர்களுக்கு உதவ மொரிங்கா
பள்ளியைத் தொடங்கினார்.
தைவான் பெற்றோருக்கு
பிறந்த ஆட்ரே செங்,
இதழியல் மற்றும் உடல்நலம் பட்டம் பெற்றவர். 15 ஆயிரம் டாலர் சேமிப்பு பணத்தை முதலீடாக்கி நியூயார்க் கோடிங் பள்ளியான ஹேக்
ரியாக்டரை கூட்டாளியாக்கினார். மோரிங்கா, கரும்பலகை கொண்ட பள்ளியல்ல. அரசின் உதவியுடன் உகாண்டா,
கானா, பாகிஸ்தான், ஹாங்காங்
ஆகிய இடங்களிலும் மோரிங்கா கணினிப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பயிற்சிக் கட்டணம் 1,400 டாலர்கள். 40% பெண்கள் கொண்ட இப்பள்ளியை நடத்தும் செங்கிற்கு கோடிங் தெரியாது. போர்ப்ஸ் இதழில் சமூகத்தொழில்முனைவோர் பட்டியலிலும் இடம்பிடித்து சாதித்துள்ளார்
ஆட்ரே செங். "மாணவர்களுக்கு தூக்கம் வராமல் கல்வி தந்து
நாட்டை தற்சார்பு கொண்டதாக மாற்றுவதே லட்சியம்" என்கிறார்
செங் கம்பீரமாக.