முதல் பெண் உளவாளி!
ஏஜெண்ட் 355!
இவரும் ஜேம்ஸ்பாண்டைப்
போலவேதான்.
ஆனால் அமெரிக்காவின் முதல் பெண் உளவாளி. அமெரிக்காவில்
புரட்சி நடைபெற்று வந்த காலத்தில் சங்கேத கடிதங்களை பிறர் பார்க்கமுடியாத இங்க் மூலம்
எழுதி தலைவர் ஜார்ஜ் வாஷிங்டனுக்கு அனுப்பிய மர்ம பெண்மணியின் அடையாளம் ஏஜண்ட்
355.
1778 ஆம்ஆண்டு பெஞ்சமின் தல்மாட்ஜ்
தொடங்கிய கல்ப்பர் ரிங் உளவு அமைப்பைச் சேர்ந்தவர்தான் ஏஜண்ட் 355. இங்கிலாந்து உளவுத்துறையைச் சேர்ந்த மேஜர் ஜான் ஆண்ட்ரேவை கைது செய்தது
355 இன் தந்திரம் என்கிறார் பெண்வரலாற்று மியூசியத்தைச் சேர்ந்த கென்னா
ஹோவத். லாங் ஐலேண்ட் நீதிபதியின் மகளான அன்னா ஸ்மித் ஸ்ட்ராங்க்
என்றும், 355 என்பது உளவு அமைப்பில் பெண்களை குறிக்கும் குறியீடு
என்பதால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இப்பெயரில் இருந்திருக்கலாம் என்று குழப்புகின்றனர்.
இன்றும் ஏஜெண்ட் 355 பற்றிய மர்மங்களை ஆராய்ச்சியாளர்கள்
தேடி வருகின்றனர்.