ஜாதிவாரியான தேர்வு முடிவுகள்- எந்த மாநிலத்தின் சாதனை இது?





Image result for shivraj singh chouhan cartoon



சிம்லாவில் தண்ணீர் காலி!

இந்தியாவின் சூப்பர் சுற்றுலாதளமான சிம்லாவிலும் வந்துவிட்டது தண்ணீர் பஞ்சம். ஒருவாரமாக நீடிக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டினால் அங்கு தங்க திட்டமிட்ட சுற்றுலா பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்துவருகின்றனர்.

"சிம்லா முனிசிபாலிட்டி தண்ணீரை சரியாக விநியோகிக்காததால்தான் இப்பிரச்னை. அனைத்து ஹோட்டல்களும் வெளியே காசுகொடுத்து நீர்வாங்குவது எப்படி சாத்தியம்?" என கேள்வி எழுப்புகிறார் ஹோட்டல் சங்கத்தலைவர் மொகிந்தர் சேத். கும்மாகிர அஸ்வினி காட், சூரத் மற்றும் சியோக் ஆகிய நீராதாரங்களின் திறன் தினசரி 65 மில்லியன் லிட்டர்கள். தற்போது நீருக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளதால் உள்ளூர் மக்கள் வேறுவழியின்றி தனியாரின் டேங்கர்நீரை க்யூவில் நின்று காசு கொடுத்து வாங்கி வருகின்றனர். சிம்லாவை மூன்று பகுதியாக பிரித்து மூன்று நாட்களுக்கு ஒருமுறை நகரங்களுக்கு நீர்தர சிம்லா முதல்வர் ஜெய்ராம் தாகூர் உத்தரவிட்டுள்ளார்.
>

 2
துர்க்காபூஜைக்கு நிதியளிக்கும் சீனா!

மேற்குவங்காளத்தின் புகழ்பெற்ற பண்டிகையான துர்காபூஜைக்கு சீனா நிதியுதவி அளிக்கவிருக்கிறது. மாநிலத்துடன் நெருக்கமான கலாசாரம் மற்றும் வணிக உறவு கொண்டுள்ள சீனா சால்ட் லேக்கிலுள்ள தன் தூதரகம் மூலம் துர்க்காபூஜைக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.

டோக்லம் பிரச்னை எழுந்தபோதும் கொல்கத்தாவில் சீனத்தூதரகம் பல்வேறு பூஜை நிகழ்வுகளில் பங்கேற்று காவல்துறையுடன் இணைந்து பரிசுகளை வழங்கியது. மேலும் சீனக்கட்டுமானத்தை பயில கலைஞர்களை தேர்வு செய்து அனுப்பி பயிற்சியளித்துள்ளது. "கொல்கத்தாவின் பாரம்பரிய திருவிழாவான துர்க்காபூஜையை மக்களுடன் இணைந்து  எங்கள் தூதரகமும் உற்சாகமாக கொண்டாடவிருக்கிறோம்" என்கிறார் தூதரக தலைவர் மா ஜான்வூ. கடந்தாண்டு சால்ட் லேக் ஏரியாவில் ஸ்பெஷல் தீமில் நடந்த துர்க்கா பூஜையின் பட்ஜெட் நாற்பது லட்ச ரூபாய்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

3

போதை தலைநகரம்!

டெல்லியில் மரிஜூவானா பயன்பாடு இவ்வாண்டு பெருமளவு அதிகரித்துள்ளது. இவ்வாண்டில் ஏப்.30 வரை 1,345 கிலோ மரிஜூவானா போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால் கடந்தாண்டு இதன் அளவு 223 கிலோதான்.

தெற்கு டெல்லி, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துவருவது முக்கியக்காரணம். கடந்தாண்டு போதைப்பொருட்களின் பயன்பாடு 2,417 கி.கி என்பது இவ்வாண்டில் 5 ஆயிரம் கிலோவை தாண்டும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு. இடுக்கி கோல்டு, ஆந்திரா ஸ்ட்ரெய்ன் வீட் ஆகியவை மாணவர்கள் விரும்பி புகைக்கும் கஞ்சா வகைகள். "டெல்லிக்கு ஒடிஷா, ஆந்திரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து கஞ்சா வருகிறது. மலைப்பாங்கான பிறர் அணுகமுடியாத பகுதிகள் கஞ்சா வளருவதற்கான ஏற்ற இடங்களாக உள்ளன" என்கிறார் குற்றப்பிரிவு டிசிபி பிஷம்சிங். மேற்கு வங்கத்தின் கூச் பெகர், மணிப்பூர், சத்தீஸ்கரின் பஸ்தர், தண்டேவடா, ஆந்திராவின் விசாகபட்டினம், கிழக்கு கோதாவரி ஆகிய பகுதிகளில் கஞ்சா பெருமளவு பயிரிடப்படுவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.  

4
ஜாதிவாரி தேர்வு முடிவுகள்

மத்தியப்பிரதேசத்தில் தேர்வு முடிவுகளையும் ஜாதிவாரியாக அறிவித்து இந்தியாவிலேயே மத்தியப்பிரதேச மாநிலம் புதிய கலாசாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச கல்வி போர்டு(MPBSE) அண்மையில் பத்து, பனிரெண்டாவது தேர்வு முடிவுகளை எஸ்சி,எஸ்டி ஓபிசி என தரவரிசைப்படுத்தி ‘Vargvaar Niyamit’ என்ற வரியோடு தெளிவாக வெளியிட்டது மக்களிடையே கடும் கண்டனங்களை கிளப்பியுள்ளது. "ஜாதிவாரியாக பிரித்ததை மக்கள் தவறாக புரிந்துகொள்ளக்கூடாது. அரசின் உதவித்திட்டங்களுக்காக இம்முறை பின்பற்றப்பட்டுள்ளது" என்று பேட்டியளித்திருக்கிறார் தேர்வுபோர்டின் தலைவர் எஸ்.ஆர். மொகந்தி. அண்மையில் முதல்வர் சிவராஜ்சிங் சௌகானை ஓபிசி மாணவர் "அதிக மதிப்பெண் எடுத்த எனக்கு மடிக்கணினி தராமல் குறைந்த மதிப்பெண் எடுத்த எஸ்சி மாணவருக்கு கொடுக்கிறீர்களே?" என்று பொதுநிகழ்வில் கேட்டதும் சர்ச்சையாகியுள்ளது.

பிரபலமான இடுகைகள்