பார்டர் தாண்டிய பசுவுக்கு என்னாச்சு?
பார்டர் தாண்டினால்
மரணம்!
டாகுமெண்ட்ஸ் இல்லாமல்
எல்லையை தாண்டினால் மனிதர்களுக்கு ஜெயில் என்றால் விலங்குகளுக்கு மட்டும் தண்டனை இல்லாமலா? யெஸ் கர்ப்பிணியாக
உள்ள பசுவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பல்கேரிய கிராமமான
கோபிலோவ்ட்ஸ்கியைச் சேர்ந்த பென்கா எனும் பசு, மேய்ச்சல் ஆர்வத்தில் புற்களை தின்றபடி
வாக்கிங்கில் ஐரோப்பாவைத் தாண்டி செர்பியா எல்லைக்கு சென்றுவிட்டது. செக்போஸ்டில் கண்கள் சிவந்த அதிகாரிகள் உடனே கர்ப்பணி பசு பென்காவுக்கு சீல்
குத்தி விதித்தது மரண தண்டனை.
பல்கேரிய அதிகாரிகள்
தற்போது மூன்று வாரத்தில் கன்று ஈனவிருக்கும் பென்காவை அதன் ஓனர் இவான் ஹராலாம்பீவிடம்
ஒப்படைத்துவிட்டனர்.
மேய்ச்சலுக்கு செல்லும்போதும் சரியான ஆவணங்களை ஒப்படைத்து பசுவை மேய்க்கவேண்டும்
என்பதை ஐரோப்பிய யூனியன் ரூல்ஸ் வலியுறுத்துகிறது. தற்போது பசுநேசர்கள்
கர்ப்பிணி பசு பென்காவை விட்டுவிடுங்களேன் என ஐரோப்பா நாடாளுமன்றத்திற்கு இமெயில் அனுப்பத்
தொடங்கியுள்ளனர்.