இந்தியாவிற்கு தேர்தலை இலக்காக கொள்ளாத தலைமை தேவை! - ரகுராம் ராஜன், பொருளாதார வல்லுநர்

 










பொருளாதார வல்லுநர், முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம்ராஜன் 

நேர்காணல் 


உலகப் பொருளாதாரம், இந்தியாவின் நிலை என இரண்டையும் எப்படி பார்க்கிறீர்கள்?


ஆண்டு தொடங்கும்போது உலகப்பொருளாதாரத்தின் முன் நிறைய கவலைகள் இருந்தன. இந்தியாவைப் பற்றி கவலைப்படவும் நிறைய விஷயங்கள் உள்ளன. அமெரிக்க பொருளாதாரம் மெல்ல வேகம் இழந்ததற்கான அறிகுறிகளை கண்டோம். இந்த பாதிப்பு கடுமையாக அல்லது மென்மையாக இருக்குமா என்பதுதான் கேள்வி. கடினமாக இருக்கும் என்பதுதான் அடையாளம் கண்ட விஷயம். எனவே, முழு உலகமும் இந்த வழியில் பயணிக்கிறது. 


பெருந்தொற்று காலத்தில் இருந்து சீன பொருளாதாரம் பெரிதாக முன்னேற்றமடையவில்லை. ஐரோப்பிய பொருளாதாரமும் கூட வேகம் பெறவில்லை. தொய்வடைந்துதான் உள்ளது. இந்தியாவைப் பார்த்தால், இந்தாண்டு சிறிது வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு நிறைய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாம் இந்த விஷயங்கள் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என காத்திருந்துதான் பார்க்கவேண்டும். 


எந்தெந்த விஷயங்களை, முக்கிய அம்சங்களை கவனமாக பார்க்கவேண்டும் என நினைக்கிறீர்கள்?


 2021ஆம் ஆண்டு தொடங்கி வெளிநாட்டு முதலீடுகள் குறைந்தே வந்திருக்கின்றன. இந்தியாவில் தனியார் நிறுவனங்களின் முதலீடு மிக குறைவாகவே இருக்கிறது. நான் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தபோது, முழுமையான திறன் அளவுக்கு முதலீடுகள் தனியாரிடமிருந்து வரவில்லை என்று கூறியிருந்தேன். மனப்பூர்வமாக அவர்கள் ஏன் முதலீடு செய்ய முன்வரவில்லை என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்? 

முதல் இரு காலாண்டுகளில் அரசு, தனது பணத்தை முதலீடு செய்தது உண்மை. இதனால் சற்று வளர்ச்சி கிடைத்தது. ஆனால் பட்ஜெட் தயாரிக்கப்படாமல் அரசு பணத்தை தருவது கடினம். இரண்டாம் பாதியில் பொருளாதாரம் தொய்ந்துவிட்டது. உற்பத்தி கூடினாலும் கூட அதை ஏற்றுமதி செய்யும் சேவைகள் வேகம் பெறவில்லை. 


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தியை மட்டுமே சார்ந்து இருக்கிறதா?


பெருந்தொற்றுக்குப் பிறகு பொருளாதார சூழல் கடினமாக மாறிவிட்டது. ஏற்ற இறக்கங்கள் நிறைய வந்தன. 2019-20 காலகட்டத்தில் பெருந்தொற்றுக்கு முன்னதாக பொருளாதார வளர்ச்சி 3.7 சதவீதமாக இருந்தது. இது இந்தியாவைப் பொறுத்தவரை நல்ல வளர்ச்சி சதவீதம் அல்ல. பெருந்தொற்று காலத்தில் உள்நாட்டு உற்பத்தி சதவீதம் மிகவும் குறைந்து பிறகு மெல்ல உயர்ந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக உள்ள வளர்ச்சி 4 சதவீதம். 


இந்தியா தன்னுடைய முழுமையான திறனுக்கு ஏற்றபடி பொருளாதார வளர்ச்சி பெறவில்லை. 6 அல்லது 7.5 சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்தால், பணவீக்கம் அதிகரித்திருக்கும். இந்த சூழலில், அரசு தொழில்துறையில் முதலீடு செய்யவேண்டும். குறிப்பிட்ட காலகட்டம் வரை வளர்ச்சிக்காக காத்திருக்கலாம். காலாண்டு வளர்ச்சி சதவீதம் சார்ந்து மட்டும் பார்த்து எந்த முடிவையும் எடுக்கவேண்டியது இல்லை. பொருளாதார வளர்ச்சியின் வடிவம் எப்படி இருக்கிறது என்று இனிதான் பார்க்கவேண்டும். 


கடன் மற்றும் சுயசார்பு வளர்ச்சி என்ன நினைக்கிறீர்கள்?


இந்தியா 7.5 சதவீதம் பொருளாதாரம் வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது. இதற்காக முதலீடு செய்யவேண்டும் கூடுதலாக கடன்களைக் கூட பெறலாம். இது சந்தையில் தேவையை அதிகரிக்கும். இதை நாடு தீர்க்க முடியாதபோது, பணவீக்க பாதிப்பு ஏற்படும். 


எதிர்பார்த்த அளவுக்கு தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வரவில்லை. அரசு செய்யும் செலவுகளுக்கு குறிப்பிட்ட வரம்பு உள்ளது. இந்த சூழ்நிலையில் வேலைவாய்ப்புகள் எப்படி உருவாகும்? 


ஒரே ஆண்டில் இதற்கு தீர்வு கிடைக்காது. குறிப்பிட்ட காலம் அடிப்படையில் தீர்வு தேடினால், அதற்கு மானியம் கொடுப்பதே தீர்வாக அமையும். இதற்கு அடுத்த தேர்தலை இலக்காக வைக்காத தலைமை தேவை. அடுத்த இருபது ஆண்டுகளில் நீங்கள் முதன்மை நாடாக வளரவில்லை என்றால் பிரச்னை உங்களிடம்தான் உள்ளது. 35 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைவு, 50 சதவீத மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு படித்தாலும், இரண்டாம் வகுப்பு கணிதத்தை போட முடியாமல் தடுமாறுவார்கள். இப்படி உள்ள சூழ்நிலையைத்தான் முதலில் மாற்றவேண்டும். 


என்ன சீர்திருத்தங்களை செய்யவேண்டுமென கருதுகிறீர்கள்?


முன்னமே கூறியது போல கல்வி சீர்த்திருத்தங்களை செய்யவேண்டும். பள்ளிக்கு திரும்பிய மாணவர்களுக்கு தேவையான கல்வியை தீவிரமான முறையில் வழங்கவேண்டும். இந்தியா எதனால் சீனாவுக்கு செல்லும் முதலீடுகளை ஈர்க்க முடியவில்லை என்பதை யோசித்து அறிய வேண்டும். வெளிநாட்டு முதலீட்டுகள் குறைவைக் கண்டறிந்து, அதிக முதலீடுகளை ஈர்க்கும் வழிகளைக் கண்டறியவேண்டும். 


அசுதோஷ் குமார், ஜோ சி மேத்யூ

ஃபார்ச்சூன் இந்தியா

கருத்துகள்